NLEAP குழு கிழக்கு மாகாணத்திற்கு வருகை தருகிறது

கிழக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆகியோருடனான NLEAP இன் சந்திப்பு.

கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் திரு.டி.எம்.சரத் அபேகுணவர்தன அவர்களையும் திருகோணமலை மாவட்டச் செயலாளர் திரு.என்.ஏ.புஷ்பகுமார அவர்களையும் மேலதிக மாவட்டச் செயலாளர் திரு. அருந்தவராஜா அவர்களையும் உதவிச் செயலாளர் என். பிரதீபன் அவர்களையும் NLEAP இன் செயற்பாடுகள் பற்றி விளக்குவதற்காக NLEAP சந்தித்தது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விசேட நான்கு வருட மொழிபெயர்ப்பு இளமானிப் பட்டப்படிப்பினை அமுல்படுத்துவதற்கான திட்டத்தினைப் பற்றிக் கலந்துரையாடுவதற்காக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான போராசிரியர் எப். ராகெல் அவர்களுடனும் சிரேஷ்ட விரிவுரையாளரான அருட்தந்தை அகஸ்டின் நவரட்ணம் அவர்களுடனும் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்பு இளமானிப் பட்டக் கற்கைநெறியினை வழங்குவது பற்றி ஆராய்வதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினை NLEAP சந்திக்கின்றது.