89 சமர்ப்பிப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளமையினை தேசிய மொழிகள் நிதியம் அறிவிக்கின்றது.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தினால் நிர்வகிக்கப்படும் தேசிய மொழிகள் நிதியம் சமர்ப்பிப்புக்களைத் தகைமை வாய்ந்த சிவில் சமூக நிறுவனங்களிடமிருந்து அண்மையில் கோரியிருந்தது:

  • தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கத்திற்காக மொழி உரிமைகளை மேம்படுத்தல்
  • கலாசாரப் பல்வகைமையினைத் தேசிய பலமாக ஏற்றுக்கொள்வதையும் மெச்சுவதையும் போஷித்தல்
  • அரசகரும மொழிகளில் இலங்கைப் பிரசைகள் தொடர்பாடுவதற்கான ஆற்றலை முன்னேற்றல்

சமர்ப்பிப்புக்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு செப்டெம்பர் 30 ஆம் திகதியாகும். தகைமை வாய்ந்த மற்றும் இலங்கையில் அரச அதிகாரசபைகளில் உரிய முறையில் பதிவுசெய்துள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள்,  தொழில்சார் அமைப்புக்கள், சனசமூக நிறுவனங்கள் மற்றும் கல்வி / ஆய்வு நிறுவனங்கள் ஆகியவற்றிடமிருந்து 89 சமர்ப்பிப்புக்களைப் பெற்றுக்கொண்டமையினைத் தேசிய மொழிகள் நிதியம் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றது. தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் குறிக்கோள்களுடன் ஒத்திசைகின்ற தெரிவுசெய்யப்படும் செயற்றிட்ட முன்னெடுப்புக்கள் 12,500,000.00 இலங்கை ரூபா வரையான நிதியிடலைப் பெறுவதற்குத் தகைமை பெறும். தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் கீழ் பால்நிலைச் சமத்துவம் மற்றும் வலுவூட்டல் ஆகியவை இச்செயற்றிட்டத்தின் இன்றியமையாத பாகங்களாக இருக்கும். பால்நிலைச் சமத்துவம் மற்றும் வலுவூட்டல் தொடர்பாகப் பணியாற்றும் நிறுவனங்கள் விண்ணப்பிப்பதற்கு ஊக்குவிக்கப்படுகின்றன. எண்ணக்கருப் பத்திரங்கள் மூன்று மொழிகளிலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை பற்றித் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் மகிழ்ச்சியடைவதுடன் இது செயற்றிட்டத்தின் ஒட்டுமொத்தக் கோட்பாடுகளுடனும் இயைபுறுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.