“சமூக உள்ளடக்கத்தினை உறுதிப்படுத்த பல்வகைமையினை உள்ளடக்குவதைக் கட்டியெழுப்பலும் வாய்மொழி சாராத் தொடர்பாடலை மதித்தலும்”

“சமூக உள்ளடக்கத்தினை உறுதிப்படுத்த பல்வகைமையினை உள்ளடக்குவதைக் கட்டியெழுப்பலும் வாய்மொழி சாராத் தொடர்பாடலை மதித்தலும்” என்எல்ஈஏபி (NLEAP) யினால் கொழும்பு ஸ்விம்மிங் கிளப்பில் நவம்பர் 18 மற்றும் 19 இல் ஒழுங்குசெய்யப்பட்ட இரண்டு நாள் செயலமர்வாகும். உள்ளடக்கத்திற்கும் மொழிசாராத் தொடர்பாடலுக்குமான ஒரு பயிற்சி மொட்யூ+லை உருவாக்குவதற்கான நிறுவனத்தின் திட்டத்தில் இது ஓர் இன்றியமையாத படியாகும். செயலமர்வில் அமைச்சின் பிரதிநிதிகளும் என்ஐஎல்ஈடி (NILET) பிரதிநிதிகளும்இ என்ஐபிஏ (NIPA) தேசிய ஒருங்கிணைப்பு மேம்பாட்டு உதவியாளர்களும்இ என்ஐபசி (NIPC) தேசிய ஒருங்கிணைப்பு மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர்களும் கலந்துகொண்டனர். செயலமர்வினை; கனடா நாட்டின் வெளிநாட்டுச் சேவை நிறுவனத்தின் கலாசாரங்களுக்கிடையிலான கற்றலுக்கான மையத்தினைச் சேர்ந்த தியோ பிரீடனும் டெரன் சி பிரவூனும் வசதிப்படுத்தினர்.

பல்வகைமையினை உள்ளடக்குவதை எவ்வாறு கட்டியெழுப்புவது மேலும் வாய்மொழிசாராத் தொடர்பாடலை எவ்வாறு மதிப்பது என்பதை எடுத்துவிளக்கிய வசதிப்படுத்துனர்கள் நடைமுறைப்படுத்திய பங்கேற்புமிக்க செயலமர்வூ முறையின் மூலம் பங்குபற்றுனர்களைச் செயலமர்வில் பூரண கவனம் செலுத்தச் செய்ததுடன் பங்குபற்றுனர்கள் அகத்தூண்டுதல் பெறவூம் வழியேற்படுத்தினர். செயற்பாடுகள் நிறைந்த இரண்டு நாள் செயலமர்வில் சிந்தனையினைத் தூண்டும் ஐஸ் பிரேக்கர்களும் கருத்துக்களையூம் அனுபவங்களையூம் ஊக்குவிக்கும் அமர்வூகளும் புதிய தொடர்புகளின் மூலம் வலையமைப்புக்களை உருவாக்கும் ஆற்றலும் பங்குபற்றுனர்கள் மிக விரும்பிய செயலமர்வின் அம்சங்களாக அமைந்திருந்தன. அமைச்சின் மொழித்திட்டமிடல் பயிற்சியின் அங்கமாகவூம் புதிய அரசாங்க உத்தியோகத்தர்களின் பரிச்சயப்படுத்தலின் அங்கமாகவூம் அமைச்சினால் மொட்யூ+ல் பயன்படுத்தப்படும். அரசாங்க ஊழியர்களுக்கான மற்றும் பொது மக்களுக்கான இரண்டாம் மொழிப் பயிற்சியில் ஒரு கூறாக மொட்யூ+லினை என்ஐஎல்ஈடி(NILET) ஒருங்கிணைக்கும். செயலமர்விலே பங்குபற்றுனர்கள் காட்டிய ஈடுபாடு மற்றும் ஆக்கத்திறன் ஆகியவற்றினால் வசதிப்படுத்துனர்கள் கவரப்பட்டதுடன் இரண்டு நாள் செயலமர்வில் இழையோடிய நகைச்சுவை உணர்வினையூம் இதமான அன்பினையூம் வசதிப்படுத்துனர்கள் விசேடமாகக் குறிப்பிடத் தவறவில்லை.