பகுதி 1 – பின்புலம் – அரசியலமைப்பு

 

பின்புலம் – அரசியலமைப்பு

இலங்கை அரசியலமைப்பு (1978) (உறுப்புரைகள் 18 முதல் 25) மொழி ஏற்பாடுகளுக்கான தெளிவான தொகுதிகளைக் கொண்டுள்ளது. மொழியின் அடிப்படையில் எந்தவொரு பிரசையும் பாகுபாட்டுக்கு உட்படுத்தப்படமாட்டார் என்பதை இந்த ஏற்பாடுகள் உத்தரவாதப்படுத்துவதுடன் ஒவ்வொரு பிரசையும் தனது கலாசாரத்தினை அனுபவிப்பதற்கான உரிமையினையும் தனது சொந்த மொழியினை அனுபவிப்பதற்கான உரிமையினையும் இந்த ஏற்பாடுகள் உத்தரவாதப்படுத்துகின்றன.

பின்வருவன மொழி ஏற்பாடுகளாகும்:

  • சிங்களமும் தமிழும் இலங்கையின் அரசகரும மொழிகளாக இருக்கும். ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கும். (உறுப்புரை 18)
  • சிங்களமும் தமிழும் இலங்கையின் தேசிய மொழிகளாக இருக்கும் (உறுப்புரை 19)
  • பாராளுமன்ற உறுப்பினரோ அல்லது மாகாண சபை உறுப்பினரோ அல்லது உள்;ளூராட்சி அதிகாரசபை உறுப்பினரோ சிங்களத்தில் அல்லது தமிழில் தனது பாராளுமன்ற அல்லது மாகாணசபை அல்லது உள்ளூராட்சி அதிகாரசபைக் கடமையினை நிறைவேற்றுவதற்கான உரித்தினைக் கொண்டுள்ளார் (உறுப்புரை 20)
  • ஒவ்வொரு நபரும் சிங்கள மொழி மூலம் அல்லது தமிழ் மொழி மூலம் கற்பிக்கப்படுவதற்கான உரித்தினைக் கொண்டுள்ளார். (உறுப்புரை 21)
  • சிங்களமும் தமிழும் இலங்கை முழுவதும் நிர்வாகத்திற்கான மொழிகளாக இருக்கும். வடக்கு மற்றும் கிழக்குத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் நிர்வாகத்திற்கான மொழியாகவும் அரச பதிவுகளைப் பேணுவதற்கான மொழியாகவும் அரசாங்க நிறுவனங்களில் அலுவல்களை நடத்துவதற்கான மொழியாகவும் சிங்கள மொழி இருக்கும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிர்வாக மொழியாகத் தமிழ் மொழி இருக்கும். எவ்வாறாயினும் மொழிசார்ந்த சிறுபான்மையினரின் சனத்தொகையின் அடிப்படையில் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளையும் பயன்படுத்துமாறு பிரிவுகளுக்கு ஜனாதிபதி பணிப்புரைகளை வழங்கலாம். (உறுப்புரை22)
  • எழுதப்பட்ட எச்சட்டத்தின் கீழும் உருவாக்கப்பட்ட அல்லது விநியோகிக்கப்பட்ட சகல கட்டளைகள், பிரகடனங்கள், விதிகள், துணைச் சட்டங்கள், ஒழுங்குவிதிகள் மற்றும் அறிவித்தல்கள் உள்ளிட்ட சகல சட்டங்களும் சட்டவாக்கங்களும் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு அல்லது இயற்றப்பட்டு ஆங்கில மொழிபெயர்ப்புடன் விநியோகிக்கப்படவேண்டும். மாகாண சபைகள் அல்லது உள்ளூராட்சி அதிகாரசபைகளைப் பொறுத்த அளவில் சகல ஆவணங்களும் அப்பிரதேசத்தின் நிர்வாக மொழியில் ஆங்கில மொழிபெயர்ப்புடன் விநியோகிக்கப்பட்டு வெளியிடப்படவேண்டும். (உறுப்புரை 23)
  • இலங்கை முழுவதும் நீதிமன்றங்களின் மொழியாகச் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் இருக்கும். தமிழ் மொழி பயன்படுத்தப்படுகின்ற வடக்கு மற்றும் கிழக்குத் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் சிங்கள மொழி பயன்படுத்தப்படும். யாராவது தரப்பினரை அல்லது விண்ணப்பதாரியினைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான உரித்தினைக் கொண்ட அவ்வாறான தரப்பினர் அல்லது விண்ணப்பதாரி அல்லது நபர் அவரின் நடவடிக்கைகளைச் சிங்களம் அல்லது தமிழ் மொழியில் நடத்தி ஆவணங்களைச் சிங்களம் அல்லது தமிழ் மொழியில் சமர்ப்பிக்கலாம். யாராவது நீதிபதி, யூரர், தரப்பினர் அல்லது விண்ணப்பதாரி அரசினால் வழங்கப்படும் சிங்களம் அல்லது தமிழ் உரைபெயர்ப்பிற்கான உரித்தினைக் கொண்டுள்ளார் (உறுப்புரை 24).
  • அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மொழிகளைப் பயன்படுத்துவதற்கான (அத்தியாயம் 4) போதிய வசதிகளை வழங்குவதற்கான பொறுப்பு அரசிற்குரியதாக இருக்கும் (உறுப்புரை 25).

பகுதி 2 – அரசகரும மொழிக்கொள்கை அமுல்படுத்தல் உபாயமார்க்கம்

 

ஹிலெய்ரெ லெமொய்ன்

மொழிக் கொள்கை ஆலோசகர் / NLEAP விசேட ஆலோசகர் /

மொழிக் கொள்கை மற்றும் சர்வதேச உறவுகள்,

அரசகரும மொழிகள் மற்றும் இருமொழியியல் நிறுவனம் (OLBI),

ஒட்டவா பல்கலைக்கழகம்

 

Spread the love