அரசாங்க மொழிபெயர்ப்பாளர்களுக்கான ஐந்து நாள் மொழிபெயர்ப்பாளர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் அரச துறையில் மொழிபெயர்ப்புச் சேவையினை மேம்படுத்துவதற்காக இலங்கை  அரசாங்கத்திற்கு வழங்கும் அதன் தொடர்ச்சியான உதவியின் கீழ் ஏற்கனவே அரசாங்க மொழிபெயர்ப்பாளர் சேவையில் கடமையாற்றும்  மொழிபெயர்ப்பாளர்களின் நன்மைக்காக ஒரு தொடரான மொழிபெயர்ப்பாளர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தினை முன்னெடுத்துள்ளது. மொழிபெயர்ப்புச் சேவைகள் தொடர்பான கொள்கைகளைக் கலந்துரையாடி நாட்டில் மொழிபெயர்ப்புச் சேவையினை முன்னேற்றுவதற்காக அரசாங்கப் பங்கீடுபாட்டாளர்களுக்குப் பொருத்தமான நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதற்காக அரசகரும மொழிகள் திணைக்களத்தின் கீழ் நிறுவப்பட்ட மொழிபெயர்ப்புக்கான ஆலோசனைக் குழுவின் பெறுபேறே மொழிபெயர்ப்பாளர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டமாகும்.

இந்த முன்னெடுப்பின் கீழ் மொத்தமாக நாற்பத்தொரு (41) மொழிபெயர்ப்பாளர்களும் மொழிபெயர்ப்பாளர் உதவியாளர்களும் மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஐந்து நாள் பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்துகொண்டனர். ஐந்து நாள் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் சட்டஆவணங்களின் மொழிபெயர்ப்பு, ஆங்கிலம் மற்றும் சிங்கள இலக்கணம் மற்றும் நடைமுறை மொழிபெயர்ப்பு ஆகியவற்றினை உள்ளடக்கியிருந்தது.

“இலங்கையில் மொழிபெயர்ப்புச் சேவை நிபுணர்களிடமிருந்து மொழிபெயர்ப்புப் பற்றிய ஐந்து நாள் பயிற்சியினைப் பெற்றுக்கொள்ளும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. மொழிபெயர்ப்புத் துறையின் சில நுண்மையான விடயங்களில் என்னால் பாண்டித்தியம் பெறக்கூடியதாக இருந்தது”.

மொழிபெயர்ப்பாளர்கள் அரசாங்க மொழிபெயர்ப்பாளர் சேவையில் இணைந்துகொண்ட பின்பு பெற்றுக்கொண்ட முதல் உத்தியோகபூர்வப் பயிற்சி இதுவாகும். இதனால் மொழிபெயர்ப்பாளர்கள் தங்களின் அனுபவம் தொடர்பாகத் திருப்தியினையும் மெச்சுதலையும் தெரிவித்திருந்தனர். பங்குபற்றுனர்களில் ஒருவர் குறிப்பிடுகையில், “இலங்கையில் மொழிபெயர்ப்புச் சேவை நிபுணர்களிடமிருந்து மொழிபெயர்ப்புப் பற்றிய ஐந்து நாள் பயிற்சியினைப் பெற்றுக்கொள்ளும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. மொழிபெயர்ப்புத் துறையின் சில நுண்மையான விடயங்களில் என்னால் பாண்டித்தியம் பெறக்கூடியதாக இருந்தது”. DOL மற்றும் NLEAP ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தின் காரணமாகத் தமது சகபாடிகளில் பெரும்பான்மையானோருடன் தமக்கு வலையமைப்பினை உருவாக்கக்கூடியதாக இருந்தது என்கின்ற அபிப்பிராயத்தினைப் பயிலுனர்கள் கொண்டிருந்தனர். இது நீண்ட காலத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட ஒரு வாய்ப்பு என அவர்கள் கூறினர். ஒரு மொழிபெயர்ப்பாளர் என்கின்ற ரீதியில் நாளாந்தம் மொழிபெயர்ப்பில் எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் பற்றிக் கலந்துரையாடுவதற்கும் அவற்றினை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றிக் கலந்துரையாடுவதற்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சகமொழிபெயர்ப்பாளர்களிடம் இருந்து நுழைபுலங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் இப்பயிற்சி வழியமைத்துள்ளது எனப் பங்குபற்றுனர்கள் தெரிவித்தனர்.