கொவிடுக்கு ஈடுகொடுத்தல் – பால்நிலையின் தாக்கங்களும் மொழி உரிமைகளும்

மொழி உரிமைகள் சகல ஆண்களினதும் பெண்களினதும் அடிப்படை உரிமைகள் என எமது நாடு கருதுகின்றது. ஆனால் இலங்கையில் வாழும் பெண்களும் ஆண்களும் அவர்களின் மொழி உரிமைகளை அடைந்துகொள்வதில் பல்வேறு அனுபவங்களைக் கொண்டுள்ளதுடன் மொழி உரிமைகளை அடைந்துகொள்வது இனத்துவ, சமூக, கலாசார மற்றும் பொருளாதார நிலைப்பாடுகளினால் பாதிக்கப்படுகின்ற அனுபவத்தினையும் கொண்டுள்ளனர். நாம் இப்போது முகங்கொடுக்கும் கொவிட் 19 போன்ற அனர்த்தச் சூழ்நிலைகள் இச்சூழ்நிலையினை மேலும் மோசமாக்குகின்றன.


ஆண்கள் அவர்களின் மொழி உரிமையினை அடைந்துகொள்வதற்கும் பெண்கள் அவர்களின் மொழி உரிமையினை அடைந்துகொள்வதற்கும் இடையில் காணப்படும் வித்தியாசம் கொள்கை உருவாக்கத்தில் பங்குபற்றல், கொள்கை மற்றும் நிகழ்ச்சித்திட்ட அமுல்படுத்தல், சேவை விநியோகம் மற்றும் சேவைகளையும் நலன்களையும் அடைந்துகொள்ளல் ஆகியவை தொடர்பில் சமமற்ற சூழ்நிலைகளை உருவாக்குகின்றன. இச்சமத்துவமின்மைகள் பொதுவாகப் பெண்களுக்கெதிராகப் பாகுபாடு காட்டுவதுடன் ஒருவரின் தெரிவுக்குரிய மொழியில் பணியாற்றுவதும் இடையீடு செய்வதும் பிரதான காரணியாக இருக்கின்ற சகல துறைகளையும் அணுகுவதையும் பாதிக்கின்றன.

மொழி உரிமைகள் என்கின்ற சூழமைவில் பால்நிலைச் சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் ஆகியவற்றுக்கு அர்த்தத்தினை வழங்குவதற்கு ஒரு சில உறுதியான உதாரணங்களே காணப்படுகின்றன என்பதுடன் எண்ணற்ற கேள்விகளுக்கு இன்னும் பதில்கள் இல்லாமலே இருக்கின்றன. ஆனால், கல்வியும் பயிற்சியும் பொருளாதாரச் செயற்பாடுகளும் நன்மைகளும் (தொழில்வாய்ப்புக்கான அணுகல் மற்றும் சுயாதீனமான வருமானம்), சுகாதாரம் மற்றும் போசாக்கும் குடும்பச் சேவைகள் தொடர்பான பிரச்சனைகள் (சொத்து, வாரிசுரிமை மற்றும் திருமணம்), சமூகப் பாகுபாட்டில் இருந்து பாதுகாப்பும் பால்நிலை அடிப்படையிலான வன்முறையில் இருந்து பாதுகாப்பும் இதனால் பாதிக்கப்படுகின்றன. தற்போது நிலவும் கொள்ளை நோய்ச் சூழல் காரணமாக இவை இப்போது இன்னும் சிக்கல்மிக்கவையாக மாறியிருக்கலாம்.

மொழி உரிமைகளை மேம்படுத்துவதில் பால்நிலைச் சமத்துவத்தினையும் பெண்களின் வலுவூட்டலையும் பெரும்போக்காக்குவதற்கான தேவை பற்றிய புரிதல் இல்லாததாலும் அது பற்றிய கவனக் குவிப்பு இல்லாமையினாலுமே இவ்வாறான பாகுபாடுமிக்க வித்தியாசங்கள் உருவாகுகின்றன. இவை பால்நிலைக் கூருணர்வற்ற கொள்கை உருவாக்கத்தினால் உருவாகி பால்நிலை ரீதியாக நடுநிலையான நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் சேவை விநியோகங்களுக்குப் பரவுகின்றமையினால் ஏற்படுகின்றன.

ஊரடங்கு நிலவிய காலப்பகுதியில் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்திருந்தமையினை உள்நாட்டு மற்றும் சர்வதேசச் சமூக ஊடகங்களும் ஏனைய பாரம்பரிய ஊடகங்களும் அறிக்கையிட்டிருந்தன. கொவிட் 19 இற்கு முகங்கொடுப்பதன் பால்நிலை அடிப்படையிலான தாக்கங்கள் பற்றிய பயன்மிகு கருத்துக்களைப் பின்வரும் கட்டுரைகள் வழங்குகின்றன.

  • பாதுகாப்பற்ற இல்லங்கள்: இலங்கையின் கொவிட் 19 பதிற்செயற்பாடுகள் பெண்கள் மற்றும் சிறார்களுக்கெதிரான வன்முறையினைத் தீர்க்க முயற்சிக்கவேண்டும்

https://www.magzter.com/article/Newspaper/Daily-Mirror-Sri-Lanka/Unsafe-Homes-Sri-Lankas-Covid-19-Response-Must-Address-Violence-Towards-Women-And-Children

  • பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கெதிரான கொவிட் 19 வன்முறை

https://www.unwomen.org/en/digital-library/multimedia/2020/4/infographic-covid19-violence-against-women-and-girls

  • கொவிட் 19 உம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கெதிரான வன்முறையினை முடிவுக்குக் கொண்டுவரலும்

https://www.unwomen.org/en/digital-library/publications/2020/04/issue-brief-covid-19-and-ending-violence-against-women-and-girls

  • கொவிட் 19 பதிற்செயற்பாட்டில் பால்நிலைச் சமத்துவம்

https://www.unwomen.org/en/news/in-focus/in-focus-gender-equality-in-covid-19-response

  • கொவிட் 19 இற்கு மத்தியில் பெண்களுக்கான நீதி

https://www.unwomen.org/en/digital-library/publications/2020/05/justice-for-women-amidst-covid-19

சிந்தனை முத்துக்கள்

ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறையினால் ஏற்பட்ட காயங்கள் காரணமாகப் பல பெண்கள் மருத்துவ சேவையினைப் பெறவேண்டியிருந்ததாக இந்த அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இவ்வாறான சம்பவங்களில்:

  • பால்நிலைச் சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்;டல் (புநுறுநு), மொழி உரிமைகள் மற்றும் அனர்த்தங்கள் ஆகியவற்றுக்கிடையில் ஓர் இணைப்பு இருக்கின்றதென நீங்கள் நினைக்கின்றீர்களா?
  • இச்சூழ்நிலையினைச் சிறந்ததாக மாற்ற என்ன செய்யப்படலாம் என நீங்கள் நினைக்கின்றீர்கள்?


சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில்

24 மணித்தியால உதவிச் சேவை


நெருக்கடியின் தாக்கத்திற்கு பதிற்செயற்பாடாற்றுவதற்காக ஊரடங்கு நேரத்தில் வீட்டிலே து~;பிரயோகம் அல்லது வன்முறைக்கு முகங்கொடுப்பவர்களுக்குப் பின்வரும் உள்நாட்டு நிறுவனங்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 24 மணித்தியால உதவிச் சேவையினை வழங்கிவருகின்றன:


விமன் இன் நீட (Women in Need) ☎️ 0114 718585

யாழ்ப்பாணம் 770822444

மாதாரா 774992555
கொழும்பு 775646555
சட்டப்பூர்வமானது 768686555

பொலிஸ் சிறார் மற்றும் பெண்கள் பணியகம் (Police Child & Women Bureau) 

☎️ 0112 444 444

   

Spread the love