பால்நிலைச் சமத்துவம், பெண்களின் வலுவூட்டல் மற்றும் மொழி உரிமைகள்

அமைச்சிற்காக பால்நிலைச் சமத்துவம், பெண்களின் வலுவூட்டல் மற்றும் மொழி உரிமைகள், கூருணர்வாக்கச் செயலமர்வினை NLEAP ஏற்பாடு செய்தது

NLEAP இனால் அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பால்நிலைச் சமத்துவம், பெண்களின் வலுவூட்டல் மற்றும் மொழி உரிமைகள்  பற்றிய செயலமர்வு கொழும்பில் ஜுலை 22 இல் நடைபெற்றது. சாமா ராஜகருன (பால்நிலைச் சமத்துவ நிபுணர் NLEAP) மற்றும் இந்திக தயாரத்ன (மதியுரைஞர்) ஆகியோர் வசதிப்படுத்திய செயலமர்வின் பிரதான குறிக்கோள் மொழி உரிமைகளினுள் பால்நிலைச் சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் பற்றிய கருத்தியல் ரீதியான புரிதலை அதிகரித்து மொழி உரிமைகளினுள் பால்நிலைச் சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டலை மேம்படுத்தும் வழிகளை ஆராய்வதாகும். செயலமர்வு உள்ளடக்கிய பிரதான பரப்புக்கள் பின்வருவனவாகும்.

  • பால்நிலை, பால்நிலை அடிப்படையிலான பாகுபாடு, பால்நிலைச் சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் ஆகியவை பற்றிய கருத்தியல் ரீதியான புரிதலை மேம்படுத்தல்
  • பால்நிலைச் சமத்துவம், பெண்களின் வலுவூட்டல் மற்றும் மொழி உரிமைகள் ஆகியவற்றுக்கிடையிலான இணைப்பினைத் தெளிவுபடுத்தல்
  • மொழி உரிமைகளினுள் பால்நிலைச் சமத்துவத்தினையும் பெண்களின் வலுவூட்டலையும் மேம்படுத்துவதற்கான நியாயப்படுத்தலை ஆராய்தல்

அமைச்சின் சிரேஷ்ட, இடைமட்ட முகாமைத்துவ மற்றும் இலிகிதர் நிலைப் பணியாளர்களும் உதவிப் பணியாளர்களும் கலந்துகொண்ட செயலமர்வின் அமர்வுகள் இடையீடு மிக்கவையாகவும் நுழைபுலம் மிக்கவையாகவும் அமைச்சினுள் பால்நிலைக் கூருணர்வுமிக்க உபாயமார்க்கங்களை உருவாக்குவதில் பாதிப்பினை ஏற்படுத்தும் பிரதான அம்சங்கள் பற்றிய கலந்துரையாடலையும் ஈடுபாட்டினையும் தூண்டுபவையாகவும் அமைந்திருந்தன. கூருணர்வாக்கல் நிகழ்ச்சித்திட்டம் பற்றி அமைச்சின் பிரதிநிதிகள் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தனர். “இதேபோன்ற செயலமர்வுகளை நீங்கள் தொடர்ந்து நடத்தக்கூடியதாக இருப்பின் நாம் அதைப் பெரிதும் மெச்சவோம்”. மொழி உரிமைகளினுள் பால்நிலைச் சமத்துவம் பற்றியும் பெண்களின் வலுவூட்டல் பற்றியும் கற்றுக்கொள்வதில் பங்குபற்றுனர்கள் காட்டிய ஆர்வத்தினால் வசதிப்படுத்துனர்கள் பெரிதும் ஊக்கப்படுத்தப்பட்டனர்.

கனடா அரசாங்கத்தினால் நிதியிடப்படும் இருதரப்புக் கருத்திட்டமான NLEAP, அரசாங்க ஊழியர்களின் பால்நிலைக் கூருணர்வுமிக்க இருமொழித் தொடர்பாடல் திறன்களை வலுப்படுத்துவதற்காகவும் தேசிய மட்டத்திலும் மாகாண மட்டத்திலும் இரண்டு அரசகரும மொழிகளிலும் (சிங்களம் மற்றும் தமிழ்) பால்நிலைக் கூருணர்வுமிக்க முறையில் அரச சேவைகளை வழங்குவதற்கான பிரதான அமைச்சுக்களின் ஆற்றலை மேம்படுத்துவதற்காகவும் இலங்கை அரசாங்கத்துடனும் சிவில் சமூக நிறுவனங்களுடனும் நெருக்கமாகப் பணியாற்றிவருகின்றது. மக்கள் தங்கள் வாழ்வினை மேம்படுத்த உதவுவதற்காக தொழில்நுட்ப நிபுணத்துவத்தினையும் முகாமைத்துவ நிபுணத்துவத்தினையும் வழங்கும் உலகளாவிய சர்வதேச அபிவிருத்தி மதியுரைஞர் நிறுவனமான Alinea இண்டர்நேசனலினால் (முன்பு Agriteam கனடா என அறியப்பட்டது) NLEAP அமுல்படுத்தப்படுகின்றது. இவ்வகையான கூருணர்வாக்கல் செயலமர்வுகளை நடத்துவது,  அரச சேவையின் செயற்திறன்மிக்க சேவையில் பாதிப்பினை ஏற்படுத்தும் மொழி சாராத் தொடர்பாடல் தடைகளை அகற்றப் பால்நிலைக் கூருணர்வுமிக்க உபாயமார்க்கங்களை உருவாக்குவதற்காகத் தெரிவுசெய்யப்பட்ட பிரதான அமைச்சுக்களுக்கும் மாகாண மற்றும் உள்ளூராட்சி அதிகாரசபைகளுக்கும் தொழில்நுட்ப உதவியினை வழங்குவதற்கான NLEAP இன் ஆணையின் இன்றியமையாத பாகமாக அமைகின்றது.

Spread the love