பகுதி 3 – அரசகரும மொழிக்கொள்கை அமுல்படுத்தல் உபாயமார்க்கத்தின் கூறுகள்

அரசகரும மொழிக்கொள்கை அமுல்படுத்தல் உபாயமார்க்கத்தின் கூறுகள்

இலங்கை மக்களின் தெரிவுக்குரிய அரசகரும மொழியில் அவர்களுக்குச் சேவையினை வழங்குவதற்காகப் பிரதான அமைச்சுக்களுக்கும் அவற்றின் நிறுவனங்களுக்கும் உதவுவதற்காக அரசகரும மொழிக்கொள்கை உபாயமார்க்கத்தினை வழிகாட்டல், சட்டகங்களின் தொகுதியாக வரைவிலக்கணப்படுத்த முடியும். நாட்டின் குறிப்பிட்ட பிராந்தியங்களில் சேவை வழங்கப்படவேண்டியவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும் தேவைப்படும் நிதி வளங்களின் அடிப்படையிலும் வழங்கப்படவேண்டிய இருமொழிச் சேவைகளை அடையாளம் காண்பதற்காக ஒவ்வொரு அமைச்சில் இருந்தும் நிறுவனத்தில் இருந்தும் மொழித்திட்டமிடல் செயன்முறை தேவைப்படுத்தப்படும். சேவைகளை வழங்குவதற்கான அரசாங்க அதிகாரிகளினதும் பதவிகளினதும் பூரண பகுப்பாய்வினையும் இருமொழி ஆற்றலின் எதிர்பார்க்கப்படும் மட்டத்தினையும் தேவைக்கேற்ப மொழிப் பயிற்சித் திட்டங்களை உருவாக்கி வழங்குவதையும் இது தேவைப்படுத்தும்.

சகல பிரதான பரப்புக்களிலும் நாட்டின் சகல நிர்வாக மையங்களிலும் கருவிகள் ஆவணங்கள் மற்றும் சேவையினைப் பெறுவோரின் மொழியில் வழங்கப்படும் சேவைகள் ஆகியவற்றின் மூலம் அரச சேவையினுள் இரண்டு மொழிக் குழுக்களினதும் மிகவும் ஒப்புரவான பங்கேற்பிக்கான அத்திவாரத்தினை இது உருவாக்குகின்றது. அதேபோல் மற்றைய தேசிய மொழியினைச் சகல மாணவர்களும் கற்று அம்மொழிக் கலாசாரத்தினை மதிப்பதற்கும் ஆங்கில மொழியினைக் கற்பதற்குமான வாய்ப்பினை வழங்கும் கல்வி முறைமைக்கான அத்திவாரத்தினையும் உருவாக்குகின்றது.

அரசகரும மொழிக்கொள்கை அமுல்படுத்தல் உபாயமார்க்கத்தின் பெறுபேறுகளைக் கண்காணிப்பதற்கும் அமைச்சுக்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களின் அரசகரும மொழிகளின் செயலாற்றுகையினை மதிப்பிடுவதற்கும் பின்னூட்டல்களையும் விதப்புரைகளையும் வழங்குவதற்கும் இலங்கை அரசாங்கத்தினுள் அரசகரும மொழிக்கொள்கையின் அமுல்படுத்தலின் நிலை பற்றிப் பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் வருடாந்தம் அறிக்கையிடுவதற்கும் வகைப்பொறுப்புச் சட்டகத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பினை அரசகரும மொழிக்கொள்கை அமுல்படுத்தல் உபாயமார்க்கம் கொண்டிருக்கும்.

பகுதி 4 – அரசகரும மொழிக்கொள்கை அமுல்படுத்தல் உபாயமார்க்கத்திற்கு என்எல்ஈஏபியின் உதவி

 

ஹிலெய்ரெ லெமொய்ன்

மொழிக் கொள்கை ஆலோசகர் / NLEAP விசேட ஆலோசகர் /

மொழிக் கொள்கை மற்றும் சர்வதேச உறவுகள்,

அரசகரும மொழிகள் மற்றும் இருமொழியியல் நிறுவனம் (OLBI),

ஒட்டவா பல்கலைக்கழகம்