தேசிய மொழிகள் நிதியம் மத்திய மாகாணத்தில் ஒருங்கிணைப்பு மற்றும் வலையமைப்புருவாக்க அமர்வுகள் மூன்றினை நடத்தியது.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தினால் நிர்வகிக்கப்படும் தேசிய மொழிகள் நிதியத்தினால் மத்திய மாகாணத்தில் கருத்திட்ட வாய்ப்பினைக் கொண்டுள்ள தெரிவுசெய்யப்பட்ட நிதி பெறுனர்களுடன் ஒருங்கிணைப்பு மற்றும் வலையமைப்புருவாக்க அமர்வுகள் மூன்று 2020 ஜுலை 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நடத்தப்பட்டன. நிலவிய சுகாதார மற்றும் பாதுகாப்பு ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக நடத்தப்பட்ட அமர்வு பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் அமைச்சின் மேலதிகச் செயலாளரான (தேசிய மொழிகள்) திருமதி எஸ் தெய்வேந்திரனின் ஆரம்ப உரையுடன் ஆரம்பமானது. கண்டி அமர்வில் திரு டொன் பிரவுன்நெல், NLEAP இன் பணிப்பாளர், கண்டி மாவட்டத்தின் மேலதிக செயலாளர் திரு ஜே சி ரனேபுர ஆகியோரும் கலந்துகொண்டனர். மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களுக்கான அமர்வுகள் கண்டியில் நடத்தப்பட்டன. நுவரெலியாவுக்கான அமர்வு நுவரெலியாவில் நடத்தப்பட்டது.

தேசிய மொழிகள் நிதியம் பற்றித் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளரான திரு எம் திருநாவுகரசு வழங்கிய சமர்ப்பணத்தில் நிதியத்தின் பிரதான குறிக்கோள்களைக் கோடிட்டுக் காட்டினார். தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் மொழிக் கொள்கை நிபுணரான திரு மொஹமட் நியாஸ் வசதிப்படுத்திய தேசிய மொழிகள் நிதியத்தின் கொடைபெறுனர்களின் சமர்ப்பணங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள மாவட்டங்களில் உத்தேச கருத்திட்டச் செயற்பாடுகள் இக்குறிக்கோள்களை அடைவதை நோக்கி எவ்வாறு செயற்படும் என்பதை விளக்கின. இதனைத் தொடர்ந்து செயற்திறன்மிக்க ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு ஆகியவற்றின் பிரதானமான அம்சங்கள் பற்றி அமைச்சின் தொழில்நுட்ப அணியினைச் சேர்ந்த திருமதி. ஞானி விக்ரமசிங்க, மற்றும் திருமதி சதுரி ஜயதிலக ஆகியோர் சமர்ப்பணங்களை மேற்கொண்டனர். தேசிய மொழிகள் நிதியத்தின் கொடைபெறுனர்களினால் பின்பற்றப்படவேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றிக் கோடிட்டுக் காட்டிய இந்த முக்கியமான ஆக்கக்கூறிற்கு சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தேசிய ஒருங்கிணைப்பு மேம்படுத்தல் உதவியாளர்களான திருமதி. டிசானி ஏகநாயக்க (NIPA-கண்டி), திருமதி C D de கொஸ்தா (NIPA-மாத்தளை) மற்றும் திரு ஆனந்த திசநாயக்க (NIPA –நுவரெலிய ஆகியோர் உதவி வழங்கினர்.

சக கொடைபெறுனர்களையும் அமைச்சு உறுப்பினர்களையும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொடர்புக்கான நபர்களையும் NLEAP அணியினையும் சந்தித்து வலையமைப்பு உருவாக்குவதற்குக் கிடைத்த வாய்ப்பினைத் தேசிய மொழிகள் கொடைபெறுனர்கள் மெச்சினர். மொழி உரிமைகளைக் கட்டமைத்து மொழிக் கற்றலைப் போஷிப்பதற்காகப் பணியாற்றும் தரப்பினர் மத்தியில் கூட்டு ஆற்றலை உருவாக்கும் இவ்வாறான வலையமைப்புருவாக்க அமர்வுகைளை வசதிப்படுத்துவது, மொழிகள் மூலம் தேசிய ஒருங்கிணைப்பினைப் போஷிப்பதற்குக் கடப்பாடு கொண்டுள்ள  ஓர் ஊக்கியாக NLEAP வகிக்கின்ற வகிபாத்திரத்திற்குப் பிரதானமானதாகும்.

இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் மொழி உரிமைகளையும் மொழிக் கற்றலையும் மேம்படுத்தும் 21 சிவில் சமூக நிறுவனங்களின் கருத்திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கு தேசிய மொழிகள் நிதியத்தின் மூலம் 148,000,000 (1.1 கனேடிய டொலர்) ரூபா நிதிக்கான கடப்பாட்டினை NLEAP வழங்கியுள்ளது. தெரிவுசெய்யப்பட்டுள்ள கருத்திட்டங்கள் இலங்கையின் ஆண்கள், பெண்கள், இளைஞர், யுவதிகள் அவர்களின் தேசத்தின் கலாசாரப் பல்வகைமை மற்றும் இருமொழித்தன்மை ஆகியவற்றினை ஏற்று மெச்சுவதைப் போஷிப்பதில் பிரதான வகிபாத்திரத்தினை வகிக்கும். சமூக ஒருங்கிணைப்பிற்கான கூட்டுச் செயற்பாடு, மொழிச் சமத்துவத்தினை மேம்படுத்துவதன் மூலம் நல்லிணக்கம், சைகை மொழி மூலமாக அரச கரும மொழிகள் கொள்கையினை மேம்படுத்தல், பன்மொழிக் கொள்கையினை மேம்படுத்தல், பன்மைவாதம் மற்றும் இளைஞர் மற்றும் பெண்களின் பங்கேற்பின் ஊடாக நல்லிணக்கம், தெரிவுக்குரிய மொழிகளில் உள்ளூராட்சி அதிகார சபைகள் சேவைகளை வழங்குவதன் மூலம் உள்ளடக்கும் தன்மைமிக்க உள்நாட்டுப் பொருளாதார அபிவிருத்தியினை மேம்படுத்தல் ஆகியவை தேசிய மொழிகள் நிதியத்தினால் வசதிப்படுத்தப்படும் அபிவிருத்திக்கான பரப்புக்களில் சிலவாகும்.

நிதிகளின் உச்ச அடைவினால் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, அநுராதபுரம், பொலனறுவை, குருணாகல், புத்தளம், கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா, கொழும்பு, களுத்தறை, மொனராகல, காலி, பதுளை மற்றும் மாத்தறை ஆகிய பிரதேசங்களில் உழைத்து வாழும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மற்றும் ஆண்களின் மீது சாதமான தாக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மொழி உரிமைகளையும் மொழிக் கற்றலையும் மேம்படுத்துவதன் மூலம் தேசிய ஒருங்கிணைப்பினையும் நல்லிணக்கத்தினையும் கட்டியெழுப்புவதற்கான NLEAP இன் ஆணையில் தேசிய மொழிகள் நிதியம் இன்றியமையாத வகிபாத்திரத்தினை வகிக்கின்றது.

குளோபல் எபயார்ஸ் கனடாவின் (Global Affairs Canada) உதவியுடன் அமுல்படுத்தப்படும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் இலங்கையில் இனத்துவக் கலாசாரப் பல்வகைமைக்கு மொழிச் சமத்துவத்தினையும் கூருணர்வினையும் உருவாக்குவதற்கான இலங்கை மற்றும் கனேடிய அரசாங்கங்களின் கட்பாட்டினைப் பூர்த்திசெய்வதற்காகத் தொடர்புடைய உள்ளூர் அரசாங்கச் செயற்படுனர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றது. Alinea International (முன்பு Agriteam கனடா என அறியப்பட்டது) இனால் NLEAP முகாமைத்துவம் செய்யப்பட்டு அமுல்படுத்தப்படுகின்றது. Alinea International மக்கள் தங்களின் வாழ்வினை முன்னேற்ற உதவுவதற்கான தொழில்நுட்ப நிபுணத்துவத்தினையும் முகாமைத்துவ நிபுணத்துவத்தினையும் வழங்கும் உலகளாவிய சர்வதேச அபிவிருத்தி மதியுரை நிறுவனமாகும்.