செயற்றிட்ட உத்தியோகத்தர்

இது செயற்றிட்ட அமுல்படுத்தலின் சகல அம்சங்களிலும் உதவும் இடைநிலைப் பதவியாகும். இப்பதவியினை வகிப்பவர் நாட்டினுள்ளே அடிக்கடி பயணம் செய்யவேண்டி இருக்கும்.

பதவியின் குறிப்பிடத்தக்க பொறுப்புக்களுள் உள்ளடங்குபவை:

 • NLEAP தொழில்நுட்ப உதவியினை வழங்குகையில் NLEAP ஆலோசர்களுக்கும் நிபுணர்களுக்கும் செயற்றிட்ட உதவியினை வழங்கல்
 • செயற்றிட்டப் பங்கீடுபாட்டாளர்கள் மற்றும் பங்காளர்களுடன் இணைந்து செயற்படல்;
 • செயற்றிட்டச் செயற்பாடுகளுக்கான பெளதிக வளங்களுக்கு உதவுதல்;
 • செயற்றிட்ட முகாமைத்துவ தகவல் முறைமைக்காகத் (MIS) தரவுகளைச் சேகரிப்பதிலும் தரவுகளைப் பதிவதிலும் உதவுதல்;
 • அறிக்கைகளைத் தயாரிப்பதிலும் ஆவணங்களைத் தயாரிப்பதிலும் உதவுதல்;
 • செயற்றிட்டப் பரமானங்களை எடுத்து விளக்கும் சமரப்பணங்களையும் ஸ்லைட் டெக்குகளையும் ஏனைய ஆவணங்களையும் தயாரிப்பதில் உதவுதல்;
 • உள்நாட்டு மற்றும் சர்வதேச மதியுரைஞர்களுக்கு செயற்றிட்டத்துடன் தொடர்புடைய உதவியினை வழங்கல்;
 • எதிர்பார்க்கப்படும் செயற்றிட்டப் பெறுபேறுகளைப் பூர்த்திசெய்யத் தேவைப்படுத்தப்படும் வேறு ஏதாவது தொடர்புடைய பொறுப்புக்கள்.

இப்பதவிக்கான ஆகக்குறைவான தகைமைகளும் அனுபவமும்:

 • தொடர்புடைய பரப்பில் (சமூக அறிவியல், பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி) இளமானிப் பட்டம் (பட்டதாரி அல்லது அதற்குச் சமமானது;
 • ஆற்றல் விருத்தி அல்லது ஆளுகைப் பரப்புக்களில் கருத்திட்ட உத்தியோகத்தராகக் குறைந்தது இருபத்துநான்கு மாத அனுபவம்;
 • MS Office இல் பணியாற்றுவதில் இடைநிலை மட்டத் தேர்ச்சி;
 • எழுத்து மற்றும் வாய்மொழித் தொடர்பாடலில் சிறந்த புலமை;
 • ஆங்கிலம் மற்றும், சிங்களம் அல்லது தமிழில், இரண்டிலும் எனின் விரும்பத்தக்கது, பேசுவதிலும் வாசிப்பதிலும் எழுதுவதிலும் மேம்பட்ட தொழில்வாண்மைத் தேர்ச்சி.

விண்ணப்பிக்கும் செயன்முறை

நீங்கள் விண்ணப்பிக்கும் பதவியினை அடையாளப்படுத்தும் அறிமுகக் கடிதத்துடன் இற்றைப்படுத்தப்பட்ட சுயவிபரக் கோவையினை 2 தொழில் ரீதியான உசாவுனர்களின் பெயர்களுடன் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு “NLEAP ஆட்சேர்ப்பு –   செயற்றிட்ட உத்தியோகத்தர்” எனும் விடய வரியுடன் 2020 செப்டெம்பர் 30 அன்று அல்லது அதற்கு முன்னர் தயவுசெய்து அனுப்பிவைக்கவும்

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் கனடா அரசாங்கத்தின் நிதியுதவி வழங்கப்படும் நான்கரை வருடச் செயற்றிட்டமாகும். நாட்டின் அனைத்துப் பிரசைகளினதும் மொழி உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் இலக்குக்கு பதிற்செயற்பாடாற்றுவதற்காகவும் அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுடனும் அதன் இணைந்த முகவர்களுடனும் சேர்ந்து அரசகரும மொழிக் கொள்கையின் அமுல்படுத்தலுக்கு உதவி அதனை வலுப்படுத்துவதற்காகவும் இச்செயற்றிட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முகவர்களுள் மொழிக் கற்கை மற்றும் பயிற்சிக்கான தேசிய நிறுவனம், அரச கரும மொழிகள் திணைக்களம் மற்றும் அரசகரும மொழிகள் ஆணைக்குழு ஆகியவை அடங்குகின்றன. செயற்றிட்டமானது பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கும் உதவி வருகின்றது.

செயற்திட்டத்தினை முகாமைத்துவம் செய்து அமுல்படுத்துவதற்கான கனடா நாட்டின் நிறைவேற்று முகவராக அலினியா இண்டர்நேசனலை (Alinea International), குளோபல் எபயார்ஸ் கனடா (GAC) நியமித்துள்ளது. NLEAP இல் செயற்றிட்ட உத்தியோகத்தர் பதவிக்கான விண்ணப்பங்களை அலினியா இண்டர்நேசனல் (Alinea International) கோருகின்றது.