பாலியல் மற்றும் பாலின ரீதியான வன்முறைகளும் மொழி உரிமைகளும்

NLEAP அலுவலர்களுக்கான செயலமர்வு

பாலியல் சமத்துவம் மற்றும் பெண்களை வலுப்படுத்துதல் (GEWE) முன்முயற்சியின் வெவ்வேறு அம்சங்கள் பற்றியும் அவற்றுடன் தொடர்புடைய மொழி உரிமைகள் பற்றியும் தொடர்ச்சியாகப் பயிற்சியளித்தல், NLEAP அதன் அலுவலர்கள் அணிக்கென நடைமுறைப்படுத்தும் கற்றல் மற்றும் அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு முக்கியமான அங்கமாகும். மொழி உரிமைகளை அனுபவிப்பதற்கான வாய்ப்புகளில் சமத்துவம் இல்லையென்பதால், பெண்கள் எவ்வாறு பாலியல் மற்றும் பாலின ரீதியான வன்முறைகளுக்கு எளிதில் பாதிக்கப்படும் நிலைக்கு ஆளாகின்றார்கள் என்பதை நன்கு புரிந்துகொள்ள, பாலியல் மற்றும் பாலின ரீதியான வன்முறைகளும் மொழி உரிமைகளும் தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற செயலமர்வு NLEAP அணிக்கு உதவியது. இந்த இடைத்தொடர்புச் செயலமர்வினை NLEAPஇன் பாலினத் துறை நிபுணர் திருமதி சாமா ராஜகருண நடத்தினார். பிரதிப் பணிப்பாளர் திரு. எம். திருநாவுக்கரசு, பாலியல் மற்றும் பாலின ரீதியான வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சட்டக் கட்டமைப்புக்கள் பற்றிச் செயலமர்வில் பங்குபற்றிய அணியினருக்கு விளக்கம் அளித்தார். இச் செயலமர்வின் மூலம் அவர்கள் பெற்றுக்கொண்ட அறிவு பெறுமதி வாய்ந்ததாகும். சமத்துவமின்மையை போக்குவதற்காக மொழித் திட்டங்களை விருத்தி செய்யும் பொருட்டு அரசாங்க நிறுவனங்களுடன் இணைந்து செயற்படும் அவர்களுக்கு இந்த அறிவு பேருதவியாக இருக்கும்.