இரண்டாம் மொழிப் பயிற்சியின் வழங்கல் மற்றும் நிர்வாகத்திற்கு உதவும் மூலோபாயம்

க்கான ஆலோசனைக் கருத்தரங்கை NLEAP நடத்தியது

NILET இனால் நடத்தப்படும் இரண்டாம் மொழிப் பயிற்சியின் வழங்கல் மற்றும் நிர்வாகத்திற்கு உதவும் மூலோபாயத்தை விருத்திசெய்யும் முகமாக, NLEAP அண்மையில் NILET அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்திருந்தது. சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளின் தரமான பயிற்சியை வழங்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள NILET, அரச ஊழியர்களுக்கான மொழி கற்றல் மற்றும் பயிற்சி நிலையம் என்ற முறையில் அங்கீகரிக்கப்படுவதற்கான ஒரு மூலோபாயத் திட்டத்தைக் கொண்டுள்ளது. மத்திய மற்றும் மாகாண மட்டங்களில் தற்போதுள்ள பயிற்சி நிலையங்களிலும்; மொழிச் சங்கங்கள் போன்ற குறித்துரைக்கப்பட்ட வேறு இடங்களிலும் இரண்டாம் மொழிப் பயிற்சியை வழங்கும் NILET, பெண் அரச ஊழியர்களின் பங்கேற்பிற்குத் தடையாகவுள்ள காரணிகளைக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கும்.