NLEAP, மொழிபெயர்ப்பாளர்களுக்கான 5 நாள் பயிற்சிக்களம் ஒன்றை DOL இன் ஒத்துழைப்புடன் நடத்தியது

NLEAP ஆனது, மொழிகள் திணைக்களத்தின் (DOL) பங்காளித்துவத்துடன் மொழியெர்ப்பாளர்களுக்கான 5 நாள் பயிற்சிக்களம் ஒன்றினை அண்மையில் நடத்தியது. மார்ச் 22ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற இப் பயிற்சிக்களத்தில் 26 அரசாங்க மொழிபெயர்ப்பாளர்கள் தமது மொழிபெயர்ப்புத் திறன்களை மேலும் மேம்படுத்திக்கொண்டார்கள். இலங்கையில் மொழிபெயர்ப்புச் சேவைகளைத் தரமுயர்ததுவதற்குத் தம்மை அர்ப்பணித்துள்ள புகழ்பெற்ற மொழிபெயர்பு வல்லுநர்கள் பயிற்சியை வழங்கினார்கள். பாலின உணர்திறன் கொண்ட இருமொழி அரச சேவைகளை பயன்நிறைவான முறையில் வழங்க அரசாங்கத்திற்கு உதவும் பொருட்டு, DOL உடன் இணைந்து NLEAP மேற்கொள்ளும் தொழில்நுட்ப உதவித் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இப் பயிற்சிக்களம் நடத்தப்பட்டது. வெவ்வேறு சமூகங்களிலுள்ள பெண்களும் ஆண்களும் தமக்கு விருப்பமான அரசகரும மொழி ஒன்றில் சேவைகள் பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு இது போன்ற பயிற்சித் திட்டங்கள் பங்களிப்புச் செய்கின்றன.

5 நாள் பயிற்சியை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்த 26 மொழிபெயர்ப்பாளர்களுக்கும் பயிற்சிக்களத்தின் முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தமது திறன்களை மேலும் வளர்த்துக்கொள்ள இத்தகைய வாய்ப்பை வழங்கியமைக்காக அவர்கள் NLEAPக்கும் DOLக்கும் நன்றி கூறினார்கள்.

திறமையுள்ள தொழில்சார் மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்குவதன் மூலம், இலங்கையில் மொழிபெயர்ப்புச் சேவையைப் பலப்படுத்துவதற்கு உதவும் இது போன்ற ஆற்றல் அபிவிருத்தித் திட்டங்களை DOLஇன் ஒத்துழைப்புடன் தொடர்ந்து மேற்கொள்வதற்கு NLEAP உத்தேசித்துள்ளது.

Spread the love