மொழி உரிமைகளில் பாலியல் சமத்துவம் மற்றும் பெண்களின் வலுப்படுத்துதலை (GEWE) ஊக்குவிக்கும் வழிமுறைகளை ஆராய்தல்

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்திற்காக பயிற்சிக்களம் ஒன்றினை NLEAP நடாத்தியது

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தின் (NILET) நன்மைக்காக, மொழி உரிமைகளில் பாலியல் சமத்துவம் மற்றும் பெண்களின் வலுப்படுத்துதல் பற்றிய பயிற்சிக்களம் ஒன்றை NLEAP அண்மையில் நடாத்தியது. இப் பயிற்சிக்களம் இரண்டு குறிக்கோள்களைக் கொண்டது. முதலாவது குறிக்கோள், NILET அணியினர் மத்தியில் பாலியல் சமத்துவம் மற்றும் பெண்களின் வலுப்படுத்துதல் பற்றிய   கோட்பாட்டு ரீதியான புரிந்துணர்வை மேம்படுத்துதல். பாலினம் தொடர்பான பக்கச்சார்பு மற்றும் தப்பபிப்பிராயங்களைப் போக்குதல் இந்த இடைத்தொடர்புச் செயலமர்வின் ஒரு பகுதியாக அமையும். அதேயளவு முக்கியமான இரண்டாவது குறிக்கோள், மொழி உரிமைகளுக்குள் GEWEஐ ஊக்குவிப்பதற்கான வழிமுறைகளை ஆராய்வதில் பங்குபற்றுநர்களை ஈடுபடுத்துவதாகும்.

NLEAP பணிப்பாளர் டொன் பிறவுனெல், பயிற்சிக்களத்தில் பங்குபற்றியவர்களை வரவேற்றுப் பேசினார்.  NLEAPஇன் மொழிக் கொள்கை மற்றும் போதனை நிபுணர் நியாஸ் ரஸ்கின், இப் பயிற்சிக்களத்தின் நோக்கங்களை எடுத்துக்கூறினார். ஆரம்பச் சொற்பொழிவை நிகழ்த்திய NILET பணிப்பாளர் நாயகம் பிரசாத் ஹேரத், NILET அணியினருக்கு இப் பயிற்சிக்களம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை விபரித்துக்கூறினார். NLEAP பாலின சமத்துவ நிபுணர் சாமா ராஜகருண, GEWE ஆலோசகர் இந்திக்க தயாரத்ன ஆகியோரினால் இடைத்தொடர்பு முறையிலும் சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் நடத்தப்பட்ட இப் பயிற்சிக்களத்தில், GEWEஐ ஊக்குவிப்பதற்கு எமது கலாசாரத்தில் தடையாக இருக்கும் அறியாமைகள் மற்றும் தப்பெண்ணங்களைப் போக்குவதன் அவசியம் பற்றி விரிவாக ஆராயப்பட்டது.

சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தரமுயர்ந்த பயிற்சியை வழங்கும் பொறுப்பை இலங்கை அரசாங்கம் NILET அமைப்பிடம் ஒப்படைத்துள்ளது. மொழிப் பயிற்சி பற்றி ஆய்வுகளை நடத்துதல், மொழிகள் தொடர்பான தகவல்களின் களஞ்சியம் ஒன்றை ஏற்படுத்துதல், தகுதி வாய்ந்த மற்றும் போதிய அளவிலான மொழிபெயர்ப்பாளர்களைப் பயிற்றுவித்தல், விசேட பிரிவுகளைச் சேர்ந்தோர்க்கென மொழிக் கற்கை நெறிகளை நடத்துதல் என்பன இந்த அமைப்பின் பணிகளுள் அடங்கும்.

மொழி உரிமைகளுக்கும் GEWEக்கும் இடையிலான தொடர்புகள் பற்றி NILET முகாமைத்துவம் மற்றும் அலுவலர்களின் புரிந்துணர்வை மேம்படுத்துவதன் மூலம், அவர்கள் தத்தமது வெவ்வேறு செயற்பாடுகளில் GEWEஐ சிறப்பாக ஊக்குவிப்பதற்கு வழிகாட்ட முடியும்.

Spread the love