கனடா தினம் மற்றும் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழி வாரத்தை கொண்டாடுதல்

கனடாவின் உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னனிடம் இருந்து செய்தி

டேவிட் மெக்கின்னன்
கனடாவிற்கான உயர் ஸ்தானிகர்
இலங்கைக்கும், மாலைதீவிற்குமான கனடாவின் உயர் ஸ்தானிகராலயம்

இலங்கையில் அரசகரும மொழிகள் தினத்தை மீண்டும் நினைவு கூர்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். 2019 ஆம் ஆண்டில், கனடா தனது நாட்டின் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கான மொழியியலைப் பாதுகாக்கும் உத்தியோகபூர்வ மொழிகள் சட்டத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. இலங்கையின் உத்தியோகபூர்வ மொழிகள் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளிப்பதற்காக இரு மொழிகளைக் கொண்ட ஒரு நாடாக எங்கள் சொந்த அனுபவத்தை பயன்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். தற்செயலாக, கனடா தினமும் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழிகள் வாரத்தின் தொடக்கத்துடன் ஒன்றுபடுகின்றது.

கனடாவானது, அதன் மொழி உரிமைகள் மற்றும் பன்முகத்தன்மை என்பனவற்றின் முன்னேற்றத்திற்கான அதன் பயணத்தில் இலங்கையின் நீண்ட கால பங்காளியாக விளங்குகின்றது. மொழி முன்னெடுப்புக்களின் தொடர்களின் ஊடாக 2000 மாம் ஆண்டுகளின் ஆரம்பத்திலிருந்தே நாம் எமது அனுபவங்களை பகிர்ந்து வருவதோடு, இலங்கையின் மொழி உரிமைகளின் பிரச்சினைகளுக்கு ஆதரவளித்தும் வருகின்றோம். தற்போது இச்செயற்பாடானது தேசிய மொழிகள் சமத்துவத்தை மேம்படுத்தும் கருத்திட்டத்தின் வடிவத்தில் மேற்கொள்ளப்படுகின்றது. இக்கருத்திட்டங்கள் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழிகள் கொள்கையின் நடைமுறைப்படுத்தலை வலுப்படுத்துவதற்கும், மற்றும் 2011 ஆம் ஆண்டில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை பரிந்துரை செய்வதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஒரு மொழியானது, நமது கருத்துக்கள், எண்ணங்கள், மற்றும் உணர்வுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள நமக்கு இடமளிக்கின்றது. இதற்கு சமூகங்களை கட்டியெழுப்பும் சக்தியிருந்தாலும் கூட, நாம் கவனமாக இருக்காவிட்டால், அது பிரிவினைகளை விதைக்கலாம். கனடா மற்றும் இலங்கை போன்ற பல்லின மற்றும் பன்முக கலாச்சார சமூகங்களின் மொழி உரிமைகள், சிறுபான்மையினர் தமது கலாச்சார, இன மற்றும் மத அடையாளங்களுக்கு மதிப்பளிக்கின்றன. அதே வேளை, அத்தகைய உரிமைகளின் பாதுகாப்பும், முன்னேற்றமும், மொழிவாரியான சிறுபான்மையினர்; தங்களை ஒட்டு மொத்தமாக நாட்டுடன் ஒன்றிணைந்தவர்களாக காணச்செய்கின்றது.

எமது வரலாற்றில் மிக நெருக்கடியான நிலைகளின் போது கூட கனடா, சேர்ப்பித்தலுக்கும்;, பன்மைத்துவத்திற்கும் முயற்சி செய்துள்ளது. இறுதியாக, எமது வேறுபாடுகள் எம்மை வலுப்படுத்தி ஒன்றிணைக்கக் கூடியதாக இருந்தாலும் கூட, அதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

மொழிகளுக்கு மரியாதையளிப்பதானது, நம்பிக்கையையும் புரிந்துணர்வையும்; மேம்படுத்துவதோடு, தனது சொந்த மொழியில் மற்றுமொருவருடன் தொடர்பு கொள்ளக் கூடிய திறமையானது, இனப் பிளவுகளை செப்பமுறச் செய்வதிலும்;;, நிரந்தரமான சமாதானத்தை அடைவதிலும் மதிப்பிட முடியாத படிநிலையாக விளங்குகின்றது. முன்னெப்போதும் இல்லாதவாறு இப்போது நாம் அனைவரும் இலங்கையிலோ, கனடாவிலோ, அல்லது உலகிலுள்ள வேறு எந்த இடத்திலோ எங்களை பிளவுபடுத்த முற்படும் தவறான தகவல்கள் மற்றும் சகிப்புத் தன்மை இன்மை தொடர்பாக கேள்வி கேட்பது மிக முக்கியமாகும்.

2021 உத்தியோகபூர்வ மொழித் தினத்தை கொண்டாடும் இந்த விN~ட சந்தர்ப்பத்தில் அனைத்து இலங்கையர்களினதும் நல்லிணக்கம், அமைதி மற்றும் செழிப்புக்கான பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.