மத்திய மாகாணத்தில் இரு மொழிகள் மூலம் அரசாங்க சேவைகளைப் பலப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் ஒன்றுசேரப் பணியாற்றுதல்

நுவரெலியா மாவட்டத்தில்  8  துணை-தேசிய நிறுவனங்களுக்கு மொழித் திட்டமிடல்

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுக் கருத்திட்டத்துடனான (NLEAP) பங்காண்மை, தேசிய மொழிப் பிரிவின் (NLD) அங்குரார்ப்பணக் கூட்டம்

 

மத்திய மாகாணத்தில், நுவரெலியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும்,எட்டு (8) அரசாங்க நிறுவனங்களுடன், அதன் அங்குரார்ப்பண மொழித் திட்டமிடல் கூட்டத்தை, அரசாங்கச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவு [National Languages Division (NLD)] ஒழுங்கு செய்திருந்தது.அது நீண்ட காலம் திட்டமிடப்பட்டதும், நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்டதுமான தினமொன்றாகும்.மெய்நிகர் (ஒன்லைன்) மூலம் இடம்பெற்ற இந்த பூர்வாங்கக் கலந்துரையாடலானது மொழித் திட்டங்களின் முன்னேற்றத்திலும், அமுலாக்கத்திலும் ‘மாதிரி நிறுவனங்களாக’ இலங்கை பூராவும் 30 துணை-தேசிய நிறுவனங்களின் முன்னேற்றத்தை நோக்கிய முதலாவது படிநிலையைக் குறித்துக்கொள்கின்றது. விசேடமாக, இரு மொழிச் சனசமூகங்களில், தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் இரு அரசகரும மொழிகளில் (சிங்களம் மற்றும் தமிழ்) அரசாங்கச் சேவைகளை வழங்குவதற்கு, முக்கிய அமைச்சுக்களின் ஆற்றலளவை மேம்படுத்துவது அரசகரும மொழிகள் கொள்கை அமுலாக்கல் மூலோபாயக் கட்டமைப்பின் உள்மைய ஆக்கக்கூறொன்றாகும். இந்த மூலோபாயத்தின் ஓர் அங்கமாக, பெண்கள் மீது தாக்கத்தினைக் கொண்டிருக்கும் கரிசனைகள் மீது, குறிப்பான குவியமொன்றுடன் மொழித் திட்டங்களைத் தயாரிப்பதற்கும், அத்துடன் அவற்றின் மொழிக் குழுக்களைப் பலப்படுத்துவதற்கும், மாகாண சபைகள், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் (விசேடமாக இருமொழியிலான பிரதேசச் செயலகப் பிரிவுகள்) ஆகியன உட்பட தெரிவுசெய்யப்பட்ட முக்கிய அமைச்சுக்களுக்கும், நிறுவனங்களுக்கும் ஆதரவளிப்பதற்காக NLDஉடன் NLEAP பங்காண்மையைக் கொண்டிருக்கும்.

மொழித் திட்டங்களின் முன்னேற்றத்தை மாதிரிப்படுத்துவதற்கு இரு மொழியிலான வலயங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 30 அரசாங்க நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்கு அமைச்சின் நீண்ட காலத் திட்டத்திலும், மூலோபாயத்திலும் முதலாவது படியாக இந்த அங்குரார்ப்பணக் கூட்டத்தை குறித்துக்கொள்வதாக தனது வரவேற்பு உரையில் திருமதி ஆர்.விஜயலக்ஷ்மி (மேலதிகச் செயலாளர்- தேசிய மொழிகள் பிரிவு, அரசாங்கச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு) குறிப்பிட்டார். தமது விருப்பு மொழியில் பொது மக்களுக்கு செயற்றிறனான/பயனுறுதிவாய்ந்த சேவைகளை அளிப்பதற்கு இந்த நிறுவனங்களின் ஆற்றலளவுகளை, மொழித் திட்டங்களின் பயனுறுதிவாய்ந்த முன்னேற்றமும், அமுலாக்கமும் பலப்படுத்துவதுடன், கட்டியெழுப்பும். இலங்கையின்  எஞ்சிய பகுதிகளுக்கு உதாரணங்களாக விளங்குவதற்கு அவற்றின் இணக்கப்பாட்டுக்கும், அர்ப்பணிப்புக்கும் என அங்குரார்ப்பணக் கூட்டத்தில் இணைந்து கொண்டமைக்காக எட்டு நிறுவனங்களுக்கு அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்ததுடன், பயணத்தின் ஒவ்வொரு படிநிலையிலும் அமைச்சின் தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படும் என நிறுவனங்களுக்கு உறுதிமொழியும் அளித்தார். மும்மொழியிலான சனசமூகமொன்றாக நுவரெலியாவை அடையாளங்கண்ட , திரு.ஆனந்த திசநாயக்க (NIPA – நுவரெலியா) 2002இல் இருந்தே இடப்பட்ட அடித்தளமொன்று மீது, பலமாக கட்டப்பட்டதாக இந்த மொழித் திட்டமிடல் முன்னெடுப்பினை முன்னுணர்வாகக் கொண்டிருந்தார். அதன் இனத்துவத்தினதும், மதத்தினதும், கலாசாரத்தினதும், மொழியினதும் மற்றும் பால்நிலையினதும் செழிப்பான பரவலாக்கத்துடன் நுவரெலியா மாவட்டத்தின் பொதுமக்கள் தமது விருப்பத்தின் பேரில் மூன்று மொழிகளில் ஏதாவது ஒன்றில் அவசியப்பட்ட அரசாங்கச் சேவைகளைப் பெறுவார்கள் எனவும், அனுபவிப்பார்கள் எனவும் அவர் கற்பனை செய்தார். அது அரசகரும மொழிகளான சிங்களமாவோ, தமிழாவோ அல்லது இணைப்புமொழியான ஆங்கிலமாவோ இருக்கலாம். இருமொழி மாவட்டமொன்றாக நுவரெலியா மாவட்டத்திற்கு அளிக்கப்பட்ட ஆதரவுக்காக, அமைச்சுக்கும், NLEAPக்கும் நுவரெலியா மாவட்டச் செயலகத்தின் மேலதிகச் செயலாளர் திருமதி சுஜீவா போதிமன்ன நன்றி தெரிவித்தார். தமது விருப்பு மொழியில் சிறந்த சாத்தியமான சேவையை நுவரெலியா மாவட்டத்தின் மக்களுக்கு வழங்கும், தெரிவுசெய்யப்பட்ட அரசாங்க நிறுவனங்களை இயலச்செய்யும் செயற்றிட்டத்தைப் பார்ப்பது ‘அது மொழிப் பயிற்சியை விட மேலானது, அது அதிகளவு பயனுள்ளதாக விளங்கும் நீண்ட கால செயற்றிட்டமொன்றாகும்’ என அவர் மேலும் குறிப்பிட்டார். அரசகரும மொழிகள் கொள்கையின் வெற்றிகரமாமன அமுலாக்கத்தில், இலங்கை அரசாங்கத்திற்கு கனடா அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படும் என பங்காளர்களுக்கு திரு.டொன் இ. புரொனெர் (NLEAP கருத்திட்டப் பணிப்பாளர்,) உறுதிமொழி அளித்தார். இலங்கை பூராவும் அரசகரும மொழிக் கொள்கையின் வெற்றிகரமான அமுலாக்கத்திற்கு முக்கிய பங்களிப்பைச் செய்யுமாறு வேண்டினார். அவர்களுக்குச் சொந்தமான  நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு, குறிப்பிட்டுக் கூறத்தக்கதாக வடிவமைக்கப்பட்ட கருத்திட்டமொன்றாக NLEAPஇன் தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படும் எனவும் அவர் உறுதிமொழி அளித்தார். மொழித் திட்டங்களின் வெற்றிகரமான முன்னேற்றத்திற்கும், அமுலாக்கத்திற்கும் அவர்களது அர்ப்பணிப்பிலும், ஆதரவிலும் தெரிவுசெய்யப்பட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல பங்காளர்களும் ஒன்றித்த மனோநிலையில் விளங்கினர்.

இலங்கையின் மத்திய மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும்  எட்டு அரசாங்க நிறுவனங்கள் பின்வருமாறு:

  • மாவட்டச் செயலகம் – நுவரெலியா
  • பிரதேசச் செயலகம் – நுவரெலியா
  • பிரதேசச் செயலகம் – அம்பகமுவ
  • நுவரெலியா மாநகர சபை
  • ஹற்றன் டிக்கோயா நகர சபை
  • மாவட்டப் பொது வைத்தியசாலை – நுவரெலியா
  • பொலிஸ் நிலையம் – நுவரெலியா
  • பொலிஸ் நிலையம் – ஹற்றன்