மொழிபெயர்ப்பில் ஆண், பெண் பாலினம்: மொழிபெயர்ப்பில் பெண்நிலைவாதமும் ஆண் பெண் பாலினமும்

மொழி உரிமைகளில் ஆண், பெண் சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான தொடக்க இணையவழி செயலமர்வினை தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் துவக்கி வைக்கின்றது.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் செப்டம்பர் 16 ஆந் திகதி இரம்மியமான மாலைப் பொழுதில் பல்கலைக்கழக கல்விசார் புலமையாளர்களுக்கு ”மொழி உரிமைகளில் ஆண், பெண் சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல்” தொடர்பாக அதன் இணையவழி தொடர்களை துவக்கி வைத்தது. இத்தொடரின் ஆரம்ப அமர்வு தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் ஆண், பெண் பாலின சமத்துவம் தொடர்பான நிபுணர் சாமா ராஜகருனா அவர்களால் தொடக்கி வைக்கப்பட்டதுடன் அவர் ஆண், பெண் பாலின சமத்துவம் தொடர்பான முக்கிய எண்ணக்கருக்களை சுருக்கமாக முன்வைத்தார். மேலும், ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் பட்டக் கற்கைகள், மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்பு அலகின் தலைவர் பேராசிரியர் லூயிஸ் வொன் ப்ளோட்டோ அவர்கள் ”மொழிபெயர்ப்பில் ஆண், பெண் பாலினம்” எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தியதுடன்,  பெண்ணிலை வாதம் மற்றும் ஆண், பெண் பாலின அரசியல் மொழிபெயர்ப்பில் ஏற்படுத்தும் தாக்கம், செல்வாக்கு செலுத்தும் விதம் தொடர்பான கலந்துரையாடல்களுக்கு அவ்வுரை வித்திட்டது.

மொழி உரிமைகளுக்கும் ஆண், பெண்  சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் அம்சங்களுக்கும் இடையில் காணப்படுகின்ற தொடர்புகளை கலந்துரையாடுவதற்கு தேவையான தளமொன்றை உருவாக்கும் நோக்கிலேயே இத்தொடர் ஒழுங்கு செய்யப்பட்டதோடு, இது அத்தகைய இணையவழி தொடர் கலந்துரையாடல்களின் முதலாவது அமர்வாகும். இந்த இணையவழித் தொடர் கலந்துரையாடல்கள் களனிய, யாழ்ப்பாணம், சப்ரகமுவை மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களின் மொழிபெயர்ப்புத் திணைக்களங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கல்விசார் புலமையாளர்களையும் ஆண், பெண் பாலினம் தொடர்பாக விஷேட துறைசார் நிபுணர்களையும் ஒன்றிணைக்கும் பாலமாக அமையும்.

இந்த இணையவழி கலந்துரையாடலின் வெற்றி பற்றி கருத்துத் தெரிவித்த நியாஸ் ரஸ்கின் (தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் மொழிக் கொள்கைப் பயிற்சி நிபுணர்) அவர்கள், ” ஒரே மேடையில் துறைசார் பேராசிரியர்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய ஒரு பகுதி தொடர்பாக  கலந்துரையாடுகின்றனர் என்பதை செவிமடுக்கும்  போது மனதுக்கு மகிழ்ச்சியளிப்பதாக சுட்டிக்காட்டியதுடன், இதில் பங்கேற்ற கூட்டுப் பல்கலைக்கழகங்களின் கல்விசார் புலமையாளர்களுக்கு நிறைய பயன்களை பெறக்கூடியதாக இருந்தது” என மேலும் குறிப்பிட்டார்.. அத்துடன், இந்நிகழ்வுக்கு விஷேட விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் தேசிய மொழிகள் திணைக்களம் மற்றும் அரசகரும மொழிகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் இக்கலந்துரையாடல் தொடர்பில் நேர்மறை பின்னூட்டல்களை வழங்கினர் என தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

கனடாவின் பெண்நிலைவாத சர்வதேச உதவிக் கொள்கைக்கு (FIAP) இணங்கவும்  ஆண், பெண்  சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் தொடர்பாக இலங்கை நாடு அதற்கே உரித்தாக்கிக் கொண்டுள்ள கடப்பாடுகளுக்கு அமைவாகவும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் அனைத்து அம்சங்களிலும் ஆண், பெண் பாலின எண்ணக்கருக்கள் மற்றும் வாய்ப்புக்கள் பற்றி வலுவான பகுப்பாய்வினை உறுதிப்படுத்தப்படுத்தும் விதத்தில் ஆண், பெண் பாலின சமத்துவம் தொடர்பாக விஷேட கவனம் செலுத்தப்படுமென இந்த இணையவழி தொடர்களின் மூலம் சிறப்பித்து எடுத்துக்காட்டப்படுகின்றது.