தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம், இலங்கை அரச கரும மொழிகள் ஆணைக்குழுவுக்கும் கனடாவின் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் பணிமனைக்கும் இடையிலான மெய்நிகர் தொழிநுட்பக் கருத்துப் பரிமாற்றல் நிகழ்வுக்கு அனுசரணை வழங்குகின்றது.

வருடாந்த அறிக்கையை தயாரித்தலும், அரச கரும மொழிகள் கொள்கை அமுலாக்கம் தொடர்பான ஆராய்ச்சியும்

தேசிய மொழிகள் மேம்பாட்டுச் செயற்றிட்டம், இலங்கை அரச கரும மொழிகள் ஆணைக்குழுவுக்கும் கனடாவின் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் பணிமனைக்கும் இடையிலான மெய்நிகர் தொழிநுட்பக் கருத்துப் பரிமாற்றல் நிகழ்வொன்றினை செப்டம்பர் 29 ஆந் திகதி ஒழுங்கு செய்திருந்ததோடு, அரச கரும மொழிக் கொள்கையின் அமுலாக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் செயற்றிறனை மேம்படுத்துவதற்கு தேசிய மொழிகள்  சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் வழங்குகின்ற துறைசார் உதவியின் ஒரு பகுதியே இந்த மெய்நிகர் தொழிநுட்ப கருத்துப் பரிமாற்றல் நிகழ்வாகும்.

2020 ஆம் ஆண்டில் அரச கரும மொழிகள் ஆணைக்குழு உத்தியோகத்தர்கள் குழுவொன்று கனடா சென்று அங்கு அரச கரும மொழிகளுக்கான கனேடிய ஆணைக்குழு உத்தியோகத்தர்களுடனும் பிரெஞ்சு மொழி சேவைகளுக்கான ஆணைக்குழுவுக்கு பொறுப்பான ஒன்ராறியோ குறைகேள் அதிகாரியுடனும் கலந்துரையாடல்களை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனினும், கொவிட்-19 போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் 2021 ஆம் வருடத்திலும் தொடர்ந்து நீடிப்பதனால் தொழிநுட்ப கருத்துப் பரிமாற்றலினை இணையவழியில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இந்நகர்வு அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் குழு அங்கத்தவர்களுள் அதிகமானோரின் பங்கேற்புக்கு வழிவகுத்தது.  இத்தொழிநுட்பக் கருத்துப் பரிமாற்றலில் பரஸ்பரம் அக்கறை செலுத்துகின்ற, அதாவது வருடாந்த அறிக்கைகள் மற்றும் அரச கரும மொழிகள் கொள்கை அமுலாக்கம் தொடர்பான ஆய்வு தொடர்பாக இரு முன்னளிப்புக்கள் நிகழ்த்தப்பட்டன.  கனடாவின் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் பணிமனையின் கொள்கைப் பகுப்பாய்வு முகாமையாளர் டயன் டிலார்ட் அவர்கள் ”வருடாந்த அறிக்கையை தயார்செய்தல்” எனும் தலைப்பிலான தனது முன்னளிப்பில்  கனடாவின் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் பணிமனையின் வருடாந்த அறிக்கையை தயாரிக்கும் பணியை மிகவும் இலகுபடுத்துவதற்கும் அதனை வாசிப்போருக்கு மிகவும் நேயமிக்கதாகவும் ஆக்குவதற்கு கருத்திற்கொள்ளப்பட்ட புதிய அணுகுமுறைகள் மற்றும் நடைமுறைகளை கோடிட்டுக்காட்டினார்.

அத்துடன், கனடாவின் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் பணிமனையின், ஆராய்ச்சி முகாமையாளர்  ரொபர்ட் ஜேம்ஸ் டப்லொட் அவர்களின், கனடாவின் அரச கரும மொழிக் கொள்கையின் அமுலாக்கம் தொடர்பாக தலைப்பு ரீதியான ஆராய்ச்சியை உறுதிப்படுத்துவதற்காக கனடாவின் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் பணிமனையினால் கருத்திற்கொள்ளப்பட்ட பல்வேறு முறைகள் தொடர்பான முன்னளிப்பும் கலந்துரையாடலும் அறிவார்ந்ததாக இருந்தன. முன்னளிப்புக்களை தொடர்ந்து கலந்துரையாடல் நெறிப்படுத்தப்பட்டதோடு அதில் குழு அங்கத்தவர்களுக்கு ஆர்வத்துடன் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்தது.