NLF | SLCFD | அரச கரும மொழிகள் கொள்கையின் உதவியுடன் சைகை மொழித் தடைகளை வெற்றிகொள்ளல்.

தேசிய மொழி நிதியத்தின் பங்காளி நிறுவனமான இலங்கை செவிப்புலன் வலுவற்றோர் சம்மேளனத்தின் முன்மாதிரி நடவடிக்கை.

தேசிய மொழி நிதியத்தின் பங்காளி நிறுவனமான இலங்கை செவிப்புலன் வலுவற்றோர் சம்மேளனத்தின் நடவடிக்கைகள் உண்மையிலேயே செவிப்புலன் வலுவற்றோரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமென்ற உள்ளுயிர்ப்பின் பிரதிபலிப்பாகும். அந்த வகையில், இலங்கை செவிப்புலன் வலுவற்றோர் சம்மேளனம் தேசிய மொழி நிதியக் குழுவுடன் இணைந்து செயற்பட தொடங்கிய காலம் முதல் அந்நிறுவனம் அரச கரும மொழிகள் கொள்கையை அணுகிய தனித்துவமான பார்வை மிகவும் ஆச்சரியமானது. எனவே, இச்சம்மேளனம் மொழி உரிமைகள் மற்றும் அரச மொழிகளின் கற்றலை ஊக்குவிக்கும் நோக்கில் தேசிய மொழி நிதியத்துடனான கூட்டுப்பங்காண்மையை ˝செவிப்புலன் வலுவற்றிருப்பது ஒரு அடையாளமே அன்றி அது ஒரு தடையல்ல” என்று சமூகத்துக்கு உணர்த்துவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக கருதியதுடன், அரச கரும மொழிகள் கொள்கையை இவ்விதத்தில் ஊக்குவிப்பதே இலங்கையிலுள்ள செவிப்புலன் வலுவற்றோர் சமூகத்தின் பிரச்சினைகளுக்கான தீர்வாக இருக்குமெனவும் கருதியது.

சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு அரச கரும மொழிகளிலும், அவ்வாறே இணைப்பு மொழியான ஆங்கிலத்திலும் பயன்படுத்துவதற்குப் பொருத்தமான சைகை மொழியை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இலங்கை செவிப்புலன் வலுவற்றோர் சம்மேளனம் இனங்கண்டுள்ளதுடன், அச்சு மற்றும் இலத்திரனியல் வடிவங்களில் சைகை மொழி அகராதியொன்று இருக்கும் விதத்தில் கலைச்சொற்களடங்கிய சொற்களஞ்சியமொன்றை தொகுக்கும் பணிகள் இடம்பெறுகின்றன. அத்துடன், சைகை மொழிகளினூடாக அரச கரும மொழிகளைப் பயன்படுத்துமாறு செவிப்புலன் வலுவற்றோர் சமூகத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளுள் ஒன்றாகவே இலங்கை செவிப்புலன் வலுவற்றோர் சம்மேளனம் தரம்  1 மற்றும் 2 சிங்களப் பாடநூல்களை சைகை மொழிக்கு மொழிபெயர்க்கும் வீடியோக்கள் தயாரிக்கப்பட்டள்ளதோடு குறித்த அனைத்து வீடியோக்களிலும் தமிழ் மொழிபெயர்ப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும், இலங்கை செவிப்புலன் வலுவற்றோர் சம்மேளனம் செவிப்புலன் வலுவற்ற சமூகத்துக்கு மத்தியில் அரச கரும மொழிகள் கொள்கை பற்றி சைகை மொழியில் செயலமர்வுகளை நடாத்தி விழிப்புணர்வைக் கட்டியெழுப்புகின்றது.  அத்துடன், செவிப்புலன் வலுவற்றோரின் மொழி உரிமைகள் தொடர்பாக அரச முகவர்களுக்கு உணர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றொரு சிறப்பம்சமாகும். செவிப்புலன் வலுவற்ற சமூகம் அரச கரும மொழிகளைப் பயன்படுத்தும் போது முகங்கொடுக்கும் பிரச்சினைகள் பற்றி அரச உத்தியோகத்தர்களுக்கு அண்மையில் ஒரு செயலமர்வு நடாத்தப்பட்டது. அங்கு குறித்த அரச உத்தியோகத்தர்கள் கைசை மொழியில் உரையாடுவது பற்றி தம்மை பயிற்றுவிக்குமாறு வேண்டிக்கொண்டனர். மேலும், இலங்கை செவிப்புலன் வலுவற்றோர் சம்மேளனத்தினால் கூட்டிணைக்கப்பட்டுள்ள சைகை மொழி உதவிப் பிரிவானது 500 க்கும் மேற்பட்ட செவிப்புலன் வலுவற்றோருக்கு மொழியுடன் தொடர்புடைய பிரச்சினைகள் மற்றும் சவால்களை வெற்றிகொள்ளவும் அவற்றுக்கான தீர்வுகளை காணவும் உதவியது.

இலங்கை செவிப்புலன் வலுவற்றோர் சம்மேளனத்துடன் இணைந்து பணியாற்றும் நாம் எமது மிகவும் முக்கிய அடிப்படை உரிமைகளுள் ஒன்றான எம்மை வெளிப்படுத்தும் உரிமை என்ற இலக்கினை எய்துவதில் மொழியின் மிக முக்கியமான வகிபாகத்தை ஞாபகப்படுத்துகிறோம். அரச கரும மொழிகள் கொள்கை தொடர்பான அவர்களின் தனித்துவமான அணுகுமுறையானது கைசை மொழி உள்ளடங்கலாக ஒவ்வொரு மொழிக்கான உரிமை எந்தளவு அடிப்படையான ஒரு விடயம் என்பதை எமக்கு நினைவூட்டுகின்றது.