பொது மக்களுக்கு இரு மொழிச் சேவைகளை வழங்குவதற்காக நீதி முறைமையின் இயற்றிறனைக் கட்டியெழுப்புதல்.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள மூன்று நீதிமன்றங்கள் மொழித் திட்டமிடலை இலகுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்துகொள்கின்றன.

பொது மக்களுக்கு  தாம் விரும்பும் மொழியில் நீதிச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதை  உறுதிப்படுத்துவது ஏதேனுமொரு தேசிய நீதி முறைமையின் செயலூக்கத்துக்கு அவசியமென்பதால்.  மொழித் திட்டமிடல்  செயன்முறையில் நீதி முறைமையின் பங்கேற்பினை வலியுறுத்த வேண்டுமென  அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவு கருதுகின்றது. அந்த வகையிலேயே,  நுவரெலியா மாவட்டத்தின் ஹற்றன் நீதவான் நீதிமன்றம், ஹற்றன் மாவட்ட நீதிமன்றம் மற்றும் நுவரெலியா தொழிலாளர் நியாய சபை ஆகிய மூன்று நீதிமன்றங்களும் அண்மையில் நடந்த மொழித் திட்டமிடலை இலகுபடுத்தும் செயலமர்வில் பங்குபற்றின. அவ்வாறே, கொத்மலை, வலப்பனை மற்றும் ஹங்குரன்கெத்தை பிரதேச செயலங்களின் உத்தியோகத்தர்களும் இச்செயலமர்வில் பங்கேற்றனர். மேலும், 2021 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் நடாத்தப்பட்ட மொழித் திட்டமிடலை  இலகுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களிலும் இந்த ஆறு நிறுவனங்களும் ஏனைய 68 துணைத் தேசிய நிறுவனங்களுடன் சேர்ந்துகொண்டுள்ளன.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டமானது தேசிய மொழிகள் பிரிவுக்கு சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் அரச சேவைகளை வழங்கும் விதத்தில் அரச நிறுவனங்களின் இயற்றிறனைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான தொழிநுட்ப உதவிகளை வழங்குகின்றது. தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் அரச சேவை நிறுவனங்களின் மொழித் திட்டமிடல் இயற்றிறனைக் கட்டியெழுப்புவது அரச மொழிகள் கொள்கையை அமுல்படுத்துவதற்கான மூலோபாய வரைவுத்திட்டத்தின் ஒரு அங்கமாகும்.