அரச சேவைகளை அரச கரும மொழிகளில் வழங்குவதற்காக அரச நிறுவனங்களின் இயற்றிறனைத் தொடர்ந்து கட்டியெழுப்புதல்.

தேசிய மொழிப் பிரிவினால்  நாடு முழுவதும் மொழித் திட்டமிடல் மீளாய்வுக் கூட்டத் தொடர்களை நடாத்துகின்றன.

2022 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவு, தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் அனுசரணையில் அரச நிறுவனங்களால் விருத்திசெய்யப்பட்ட மொழித் திட்டங்களை மீளாய்வு செய்வதற்காக கிளிநொச்சி, திருகோணமலை, நுவரெலிய, கண்டி, காலி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நடாத்தப்பட்ட 6 ஒரு நாள் செயலமர்வுகளும்  2021 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டு முழுவதும் தெரிவுசெய்யப்பட்ட 68 அரச நிறுவனங்களுக்கென நடாத்தப்பட்ட மொழித் திட்டமிடல் தொடர்பான தொழிநுட்பப் பயிற்சிப் பட்டறைகளின் தொடராகவே அமைந்திருந்தன.

மேற்கூறப்பட்டவாறு தெரிவுசெய்யப்பட்ட நிறுவனங்களால் தயார்செய்த  மொழித் திட்டங்களின்  வரைபுகளை  தேசிய மொழிகள் பிரிவுடன் பகிர்ந்துகொள்ளவும் மொழித் திட்டங்களை விருத்திசெய்யும் போது எதிர்கொண்ட ஒரு சில சவால்களை கலந்துரையாடவும் இந்த மீளாய்வுகள் குறித்த நிறுவனங்களுக்கு களம் அமைத்துக் கொடுத்தன. நாடு முழுவதும் மொழித் திட்டங்களை விருத்திசெய்து அமுல்படுத்தும் ”மாதிரி நிறுவனங்களாக” பிரதான துணைத் தேசிய நிறுவனங்களை விருத்தி செய்வதில் மொழித் திட்டமிடலை இலகுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டமானது மிகவும் முக்கியமானதொரு படிமுறையாகும். அவ்வாறே, தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் (சிங்களம் மற்றும் தமிழ்) ஆகிய இரு அரச கரும மொழிகளில் அரச சேவைகளை வழங்கும் விதத்தில் பிரதானமான அரச நிறுவனங்களின் இயற்றிறனை கட்டியெழுப்புவது அமைச்சினால் அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட அரச கரும மொழிகள் கொள்கையை அமுல்படுத்துவதற்கான மூலோபாய வரைவுத்திட்டத்தின் ஒரு பிரதான அம்சமாகும். இவ்வாறு தெரிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் அர்ப்பணிப்புடனும் ஈடுபாட்டுடனும் மொழித் திட்டங்களை விருத்தி செய்துள்ளமையினால் தேசிய மொழிகள் பிரிவு மற்றும் தேசிய சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் மேலும் ஆர்வத்துடன் இப்பணிகளில் தமது பங்களிப்புக்களைக் தொடர்ந்தும் வழங்கிக்கொண்டிருக்கின்றது.