மிகச்சிறந்த வகைகூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கட்டியெழுப்புவதற்கான சிறந்த நடைமுறைகளிலிந்து பிரஜை விழிப்புணர்வு மற்றும் ஈடுபாட்டினை மேம்படுத்துவதற்குக் கற்றுக்கொள்ளல்.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் (NLEAP) வருடாந்த அறிக்கையிடல் மற்றும்  பிரதானிகள் மற்றும் அரச கரும மொழி ஆதரவாளர்கள் தொடர்பான  தொழிநுட்பக் கருத்துப் பரிமாற்றல் நிகழ்வுகளுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குகின்றது.

வருடாந்த அறிக்கையிடல் தொடர்பான தொழிநுட்பக் கருத்துப் பரிமாற்றல் நிகழ்வில் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் கருத்திட்டப் பணிப்பாளரான திரு. டொன் ப்ரோநெல் அவர்கள் அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவு, அரச கரும மொழிகள் திணைக்களம், இலங்கை அரச கரும மொழிகள் ஆணைக்குழு ஆகிய நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்திருந்த உத்தயோகத்தர்களை அலீனியா மற்றும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் சார்பாக வரவேற்று உரையாற்றியதுடன்  இந்த அமர்வு மேலும் அர்த்தமுள்ளதாகவும் சிறப்பாகவும்  இருக்கும் விதத்தில் தமது செயலார்வமிக்க ஈடுபாட்டினையும் பங்களிப்புக்களையும் நல்கிய திரு. Carsten Quell அவர்களுக்கும் (கனடா நாட்டின் அரச கரும மொழிகள் செயலகமான திறைசேரி சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர்), திரு. Hocine Toulait அவர்களுக்கும் (கனடா நாட்டின் அரச கரும மொழிகள் செயலகமான திறைசேரி சபையின் சிரேஷ்ட கொள்கைப் பகுப்பாய்வாளர்) மற்றும் கனடா நாட்டின திறைசேரி சபைக் குழுவுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்துத்தெரிவித்த  அம்மணி வீனா வர்மா அவர்கள் (செயற்றிட்டப் பணிப்பாளர், மனித உரிமைகள், பாலினம் மற்றும் நல்லாளுகை ஆலோசகர்,  அலீனியா நிறுவனம்) தொழிநுட்பக் கருத்துப் பரிமாற்றல் நிகழ்வுகள் வெற்றிகரமாக அமைவதற்கு கனடா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் இணைந்து நல்கும் பங்களிப்புக்களுக்காக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் இந்த அமர்வுகளிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடங்கள் தேசிய மொழிகள் பிரிவுக்கு அப்பால் பரந்தளவில் இதர அம்சங்களுக்கும் பொருந்துவனவாக  இருக்குமென மேலும் வலியுறுத்தினார்.

அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவின் மேலதிக செயலாளர் அம்மணி. ஆர். விஜயலெட்சுமி  அவர்கள் வருடாந்த அறிக்கைகள் தொடர்பான இத்தொடருக்கு தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்ததோடு இது தேசிய மொழிகள் பிரிவினால் கருத்திற்கொள்ள வேண்டியுள்ள புதியதொரு பரப்பு எனக் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் அனைத்து நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற உத்தியோகத்தர்கள் திரு. Hocine அவர்களின் அவதானத்துக்கு இணக்கமாகவே கருத்துத்தெரிவித்தனர். அதாவது, “கனடா அரசாங்கம் அரச கரும மொழிகள் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக என்ன செய்கின்றது எனப் புரிந்துகொள்ள கனடா நாட்டு மக்களுக்கு உதவும் ஒரு ஆவணமாக வருடாந்த அறிக்கையைக் கருத்திற்கொள்ள வேண்டும். அது அரச உத்தியோகத்தர்களுக்கு மட்டும் உரித்தான ஆவணமல்ல. மாறாக பொது மக்களால் வாசித்து புரிந்துகொள்ளக் கூடிய ஆவணமாக இருக்க வேண்டும்” என்பது திரு. Hocine அவர்களின் அவதானமாகும். அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த திரு. Hocine அவர்கள்  “அறிக்கையிடுதல் என்பது எம்மைப் பொருத்தவரையில் முக்கியமானது. ஏனெனில், குறித்த வருடத்தில் நாம் என்ன செய்துள்ளோம் என்பதை வெளிப்படைத்தன்மையுடன் மக்களுக்கு மீண்டும் விவரித்துக் கூறுவதற்கு அது வழிகோலும்” எனக் குறிப்பிட்டார்.

அவர் மேலும், ”கனடா நாட்டில் வருடாந்த அறிக்கை என்பது அரச கரும மொழிகள் சட்டத்தினால் சட்டரீதியாக கட்டாயப்படுத்தப்பட்டுள்ள ஒரு ஆவணமாகும். அது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்” என விபரித்தார்.  மேலும் திரு. Hocine அவர்கள், கனடா நாட்டின் திறைசேரி சபையானது கொள்கைத் திட்டமிடல் முதல் அறிக்கையிடல் வரை பின்பற்றும் ஒட்டுமொத்த படிமுறைகளை மிகவும் ஆழமாக பகிர்ந்துகொண்டதோடு ”வருடாந்தம் அறிக்கையிடுவது சட்டரீதியான கடப்பாடு என்றும் கொள்கை அமுல்படுத்தலில் தாக்கத்தினை ஏற்படுத்துகின்ற தொழிநுட்ப மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழற் காரணிகளை பிரதிபலிக்க வேண்டுமென்றும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவரான சட்டத்தரணி திரு. டீ. கலன்சூரிய அவர்கள், அறிக்கையிடுதல் தொடர்பாக நாமும் கனடா நாடும் இரு வேறு அணுகுமுறைகளைப் பின்பற்றுவதாக சுட்டிக்காட்டினார். அதாவது நாம் வருடாந்த அறிக்கையைத் தயாரிக்கும் போது பிரதானமாக எமது நடவடிக்கைகள் மற்றும் வரவு செலவுத் திட்டங்களில் கவனம் செலுத்தும் வேளையில், கனடா அரசாங்கம் சேவை வழங்கலில் இணைத்துக்கொள்ளப்பட்ட தர ரீதியான அணுகுமுறைகளை உறுதிப்படுத்துகின்றது. அம்மணி. விஜயலெட்சுமி அவர்கள், இது ”வகைகூறல் மற்றும் வெளிப்படைத் தன்மை ஆகிய இரண்டையும் இணைத்துள்ள காலத்துக்கேற்ற கருத்துப் பரிமாறல் தொடர்” எனக் குறிப்பிட்டார்.

மேலும், கருத்துத் தெரிவித்த அம்மணி ஆர். விஜயலெட்சுமி அவர்கள், கனடா நாட்டின் உத்தியோகத்தர்கள் பாராளுமன்றத்துக்கும் பொது மக்களுக்கும் கிடைக்கும் விதத்தில் அறிக்கையினை சமர்ப்பிக்கும் போது குறிப்பாக மீளாய்வு மற்றும் கண்காணிப்புச் செயன்முறையில் பின்பற்றும் செயன்முறைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளிலிருந்து அரச கரும மொழிகள் கொள்கையை அமுல்படுத்துவதற்கான மூலோபாய வரைவுத்திட்டத்தில் தம்மை ஈடுபடுத்தியுள்ள பல்வேறு கரிசனையாளர்களைக்கு தேவையான புரிதல்களைப் பெற்றுக்கொள்ள மெய்நிகர் கருத்துப் பரிமாற்றல் நிகழ்வு சிறந்த வாய்ப்பாக இருக்குமென குறிப்பிட்டார்.

அத்துடன், திரு. ஸ்டெபன் டெரி அவர்கள் (உதவிப் பிரதி அமைச்சர், அரச கரும மொழிகள் ஆதரவாளர் மன்றத்தின் தலைவர், கனடா மொழிபெயர்ப்புப் பணிமனையின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி) பிரதானிகள் மற்றும் மொழி ஆதரவாளர்கள் தொடர்பான மெய்நிகர் கருத்துப் பரிமாற்றல் நிகழ்வில் சிறப்புரை  நிகழ்த்தினார்.  மொழி உரிமைகள் தொடர்பாக தீவிர ஆதரவாளரான திரு. டெரி அவர்கள் மொழி உரிமைகளில் பிரஜைகளின் ஈடுபாட்டினை மேம்படுத்துவதற்கு அரச கரும மொழிகள் கழகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட சில நிகழ்ச்சித்திட்டங்களைப் பகிர்ந்துகொண்டார்.  மொழி உரிமைகளை வென்றெடுப்பதில் அதிக ஆர்வம் காட்டிய ஒருவரின் அனுபவப் பகிர்வானது இந்நிகழ்வில் பங்கேற்ற உத்தியோகத்தர்களுக்கு ஊக்கமளிக்கக்கூடியதாக இருந்தது.

இத்தொடர் நிகழ்வுகளில் பங்கேற்ற தேசிய மொழிகள் பிரிவு மற்றும் பங்காளி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மெய்நிகர் தொழிநுட்ப நிகழ்வுத் தொடர்களிலிருந்து பெற்ற நடைமுறை ரீதியான  அனுபவங்களுக்கு தமது நன்றிகளை தெரிவித்தனர். எனவே, தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்ச்சித்திட்டங்களை ஏற்பாடு செய்து மொழித்துறைக்குத் தேவையான தொடர் ஒத்துழைப்பினை வழங்கும்.