செயற்றிட்ட ஒப்படைப்பில் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டின் பயன்களை ஆராய்தல்

கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் சாதாரண செயற்றிட்ட முகாமைத்துவம் தொடர்பாக தேசிய மொழிகள் நிதியப் பங்காளரின் மெய்நிகர் கூட்டமும் கலந்துரையாடலும்.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் (NLEAP) தேசிய மொழிகள் நிதியத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் உதவி பெறும் பங்காளிகளுக்கு மெய்நிகர் தகவல் அமர்வொன்றினை ஒழுங்குசெய்தது. அலீனியா நிறுவனத்தின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுத் துறைசார் நிபுணரான திரு. கய் இன்ஸ் அவர்களின் வழிநடாத்தலின் கீழ் இடம்பெற்ற இத்தொடரில் தேசிய மொழிகள் நிதியத்தின் பங்காளி நிறுவனங்களில் கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் சாதாரண செயற்றிட்ட முகாமைத்தும் ஆகிய துறைகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு தொழிநுட்ப உதவி வழங்கப்பட்டது. குறித்த அமர்வின் நிகழ்வுகள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் மாத்திரமன்றி சைகை மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டதுடன் அங்கு மொழி உரிமைகள் மற்றும் இரண்டாம் மொழிக் கற்றலை ஊக்குவிப்பதற்காக தேசிய மொழிகள் நிதியத்துடன் இணைந்து செயற்படுகின்ற சிவில் சமூக அமைப்புக்களின் பல்லவகைமையும் கோடிட்டுக்காட்டப்பட்டது.

அறிக்கையிடுதல் எனும் செயன்முறைக்கு இன்றியமையாதவை எனக் கருதப்படுகின்ற சுட்டிகள் மற்றும் தரவுகளை வழங்கும் போது மிகச் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கு தேசிய மொழிகள் நிதியத்தின் பங்காளருக்கு தொழிநுட்ப உதவியை வழங்குவதே இத்தொடரின் நோக்கமென திரு. திருநாவுக்கரசு மாரிமுத்து (பிரதிச் செயற்றிட்டப் பணிப்பாளர் – NLEAP) அவர்கள் விளக்கினார். அதனைத் தொடர்ந்து திரு. டொன் ப்ரௌனெல் (செயற்றிட்டப் பணிப்பாளர் – NLEAP) அவர்கள் இந்த அமர்வுக்கு வருகைதந்துள்ள தேசிய மொழிகள் நிதியத்தின் பங்காளி நிறுவனங்களை வரவேற்று மொழி உரிமைகள் மற்றும் இரண்டாம் மொழிக் கற்றலை மேம்படுத்துவதற்காக அவர்கள் நல்கும் பெறுமதிமிக்க பங்களிப்புக்களுக்காக அந்நிறுவனங்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும், அவர் “நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம், என்ன செய்யவில்லை, மிகவும் சிறப்பாக என்ன செய்யலாம் என விளங்கிக்கொள்ள தகவல்கள் மிகவும் முக்கியமானவை” என வலியுறுத்தினார். அத்துடன், “சர்வதேச அபிவிருத்தி உதவியின் பெறுமதியை கனடா நாட்டு மக்களுக்கு நிரூபித்துக்காட்டுவதற்கு” தரமான தகவல்கள் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்துக்கு உதவியாக இருக்கும் என்றும் நாம் “என்ன செய்துகொண்டிருக்கின்றோம், என்ன செய்யவில்லை” என விளங்கி தம்மை தயார்படுத்திக்கொள்ள எமது நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர்களுக்கு உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, திரு. கய் இன் அவர்கள் தேசிய மொழிகள் நிதியத்தின் பங்காளிகளை அவர்கள் தற்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கும் பணிகளுக்காக பாராட்டியதோடு, ஒப்பந்தம் பொறுப்பளிக்கப்பட்டபோது பங்காளி நிறுவனங்களால் பின்பற்றப்பட வேண்டுமென பரிந்துரைத்த தேசிய மொழிகள் நிதியத்தின் மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு வழிக்காட்டல்களுக்கேற்ப புள்ளிகளையும் சுட்டிகளையும் வழங்கியமைக்கு தனது நன்றிகளைத் தெரிவித்தார். அத்துடன், தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் மற்றும் அலீனியா நிறுவனத்தினால் கடைப்பிடிக்கின்ற “சரியானதை சரியான வழிமுறையில் செய்வதற்கான சான்றடிப்படையிலான அணுகுமுறை”யினை கோடிட்டுக்காட்டி தேசிய மொழிகள் நிதியத்தின் பங்காளி நிறுவனங்கள் எய்துள்ள முன்னேற்றத்தினை கரிசனையாளர்கள் இனங்கண்டு விளங்கிக்கொள்வதற்கு மிகவும் சிறந்த தரமான தகவல்கள் எவ்வாறு ஒரு உத்தியாக இருக்குமென விளக்கினார். அவர் தனது முன்னளிப்பிலும் தேசிய மொழி நிதியத்தின் பங்காளர்களுடனான கலந்துரையாடலிலும் வலியுறுத்திய  மிகவும் முக்கியமானதொரு அம்சம் யாதெனில் சமூகத்தில் பயன்பெறுபவர்கள் பற்றி ஒரு மாதிரியைத் திரட்டுவதாகும். அதாவது, “இது பயனாளிகளை இலக்காகக்காண்டு என்ன நடைபெறுகின்றது, அவர்கள் எவ்வாறு பயனடைகிறார்கள் என மதிப்பிடுவதற்கான முக்கியமானதொரு சுட்டியாகும்” எனக் குறிப்பிட்டு “பயனாளிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் உண்மையான துல்லியமான தகவல்கள் அடைந்துள்ள முன்னேற்றம் யாதென கணிப்பிடுவதற்கும், பூர்த்திசெய்துள்ள பணிகளின் வினைத்திறன் யாதென விளங்கிக்கொள்ளவும் அவை அவர்களில் எத்தகைய தாகத்தினை ஏற்படுத்தியுள்ளதென யதார்த்தமாக விளங்கிக்கொள்ளவும் இன்றியமையாதவை” என வலியுறுத்தினார்.

தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில், உண்மையான, பொருத்தமானதொரு பார்வையைப் புரிந்துகொள்ள பக்கச்சார்பற்ற துல்லியமான மாதிரித் தகவல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை தாம் தெளிவாக விளங்கிக்கொண்டுள்ளதாக தேசிய மொழிகள் நிதியத்தின் பங்காளி நிறுவனங்கள் குறிப்பிட்டதோடு தொற்று நோய் காரணமாக பயனாளிகளைச் சந்திப்பதில் தாம் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்ததாகவும் சுட்டிக்காட்டினார்கள். தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்ட அணியுடன் இச்சவால்களுக்கான நடைமுறைத் தீர்வுகளைக் கலந்துரையாட சந்தர்ப்பம் கிடைத்தமைக்காக அவர்கள் தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.

தேசிய மொழிகள் நிதியத்தின் பங்காளிகள் தாம் இத்தொடரிலிருந்து கற்றறிந்துகொண்ட விடயங்களுக்காக தமது நன்றிகளைத் தெரிவித்தனர். மொழி உரிமைகள் மற்றும் இரண்டாம் மொழிக் கற்றலை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளுக்கு தொழிநுட்ப உதவிகள் வழங்கப்படும் என்ற பணிப்பாணைக்கு அமைவாக தேசிய மொழிகள் சமத்துவ  மேம்பாட்டுச் செயற்றிட்டம் இத்தகைய ஆற்றலைக் கட்டமைக்கும் சந்தர்ப்பங்களை எதிர்காலத்திலும் தொடர்ந்து ஒழுங்குசெய்யும்.

Spread the love