இரண்டாம் மொழிக் கல்வியில் பால்நிலைக்குக் துலங்கல் காண்பிக்கும் தலைமைத்துவத்தையும் நிர்வாகத்தையும் ஊக்குவித்தல்.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் (NLEAP) மொழிக்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய நிறுவனத்தினை இலக்காக்கொண்டு (NILET) பால்நிலைக்குத் துலங்கல் காண்பிக்கும்  தலைமைத்துவம் மற்றும் நிர்வாகம் தொடர்பான ஆற்றலைக் கட்டமைத்தல் செயலமர்வினை ஒழுங்குசெய்கின்றது.   

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் (NLEAP) அண்மையில் மொழிக்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய நிறுவனத்தினை இலக்காகக்கொண்டு இரண்டாம் மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பால்நிலைக்குத் துலங்கல் காண்பிக்கும் தலைமைத்துவம் மற்றும் நிர்வாகம் தொடர்பான ஆற்றலைக் கட்டமைத்தல் செயலமர்வொன்றினை நடத்தியது. அது மொழிக்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய நிறுவனத்தின் விசேட வேண்டுகோளைக் கருத்திற்கொண்டு கடந்த பெப்ரவரி மாதம் 21 மற்றும் 22 ஆந் திகதிகளில் இருநாள் செயலமர்வாக இடம்பெற்றது. இங்கு உரைநிகழ்த்திய திரு. ஜயம்பதி பண்டார ஹீன்கெந்த (தலைவர் – NILET) மற்றும் கலாநிதி. ப்ரசாத் ஹேரத் (பணிப்பாளர் நாயகம் – NILET) ஆகிய இருவரும் தமது ஆரம்ப உரைகளில் அரச கரும மொழிகள் கொள்கையின் அமுல்படுத்தலில் பால்நிலைக்கு துலங்கல் காண்பிக்கும் மொழிப் பயிற்சி மிகவும் முக்கியமானதென வலியுறுத்தினார்கள். மேலும் பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டலை ஊக்குவிக்கின்ற அம்மணி. சாமா ராஜகருணா (தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் ஆண், பெண் சமத்துவம் தொடர்பான நிபுணர் ) அவர்கள் மொழிக் கற்பித்தல் மற்றும் பயிற்சியில் பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டலை இணைத்துக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை கோடிட்டுக்காட்டினார். அதனைத் தொடர்ந்து இந்த அமர்வுகளின் பிரதான வளவாளரான கலாநிதி. குஷானி தீ சில்வா (PhD UK) இத்தொடரின் அறிமுக உரையை நிகழ்த்தினார்.

செயலமர்வின் முதல் நாளில் தலைமைத்துவ வேறுபாடுகள் மற்றும் நிஜமான தலைமைத்துவத் திறன்கள், மொழிக் கல்வியில் பால்நிலைக்குத் துலங்கல் காண்பிக்கும் அடிப்படை முகாமைத்துவ மூலோபாயங்களைப் பிரதிபலிக்கும் விதத்தில் சாமர்த்தியமாக செயற்படுவதற்கு நிஜமான தலைமைத்துவத் திறன்களை பிரயோகிப்பதற்கான நுட்பங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதோடு சந்தர்ப்பத்துக்கேற்ற குழு நடவடிக்கைகளும் இடம்பெற்றன. அதே போன்று, செயலமர்வின் இரண்டாம் நாளில் பல்-வகைக் கல்வி பற்றி அறிவுபூர்வமாக சிந்தித்தல், கல்வியில் பால்நிலை உணர்திறனை முக்கியத்துவப்படுத்தி ஆபத்துக்களைக் குறைப்பதற்காக மனிதனால் இடம்பெறும் தவறுகளைத் தவிர்த்தல் மற்றும் பால்நிலைக்குத் துலங்கல் காண்பிக்கும் கல்வி அம்சங்களை முக்கியத்துவப்படுத்தி மூலோபாய முகாமைத்துவத்துக்கான வினைதிறன்மிக்க தொடர்பாடல் ஆகிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. அத்துடன், சந்தர்ப்பத்துக்கேற்ற குழு நடவடிக்கைகளில் குறித்த செயலமர்வின் பங்கேற்பாளர்களுக்கு தமது நடவடிக்கையின் பரப்பெல்லைக்குப் பொருத்தமான உண்மையான விடய ஆய்வுகளுக்கு தமது கற்றல்களை இணைத்துக்கொள்வதற்கான வாய்ப்புக்களும் வழங்கப்பட்டன.

இலங்கையின் அரச கரும மொழிகள் கொள்கையை வினைத்திறனுடன் அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தினால் நல்கும் தொழிநுட்ப உதவியின் ஒரு பகுதியாகவே பங்காளி நிறுவனங்களின் ஆற்றலைக் கட்டமைத்தல் செயலமர்வுகள் நடத்தப்படுகின்றன.

Spread the love