மொழி உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரக கரும மொழிக் கொள்கையை அமுல்படுத்துதல்.
மொழி என்பது அடையாளத்தின் முக்கியமானதொரு சின்னமாகும். அது மனித தொடர்பாடலில் இன்றியமையாத அம்சமாக இருந்து வருகின்றது. அவ்வகையில், ஒவ்வொரு நாடும், அரசாங்கமும் நாட்டின் அனைத்துப் பிரஜைகளின் மொழி உரிமைகளைப் பேணுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமானது. இலங்கையில் பல்வேறு இனச் சமூகங்களின் அதிகாரம் மற்றும் வளங்களுக்கான போராட்டத்தில் மொழி உரிமைகள் குறிப்பிடத்தக்கதொரு வகிபாகத்தினை ஆற்றி வருகின்றன. 1956 ஆம் ஆண்டு தமிழ் மொழியைப் புறக்கணித்துவிட்டு சிங்களத்தை தேசிய மற்றும் அரச...