அரசகரும மொழிகள் வாரம் – 2021 அகில இலங்கை பாடசாலைக் கட்டுரைப் போட்டியின் வெற்றியாளர்கள்

வருடாந்தம் ஜூலை மாதம் 01 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரையில் இடம்பெறும் அரசகரும மொழிகள் வாரத்தினை முன்னிட்டு அரசகரும மொழிகள் ஆணைக்குழு, தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்துடன் இணைந்து 2021 ஆம் ஆண்டில் நடாத்திய அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கட்டுரை போட்டிக்காக பாடசாலை மாணவர்களினால் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில ஆகிய மொழிமூலங்களில் 1210 இற்கும் மேற்பட்ட கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

இக்கட்டுரைப் போட்டியானது, கொரோனா தொற்று நிலைமையானது நாட்டினுள் நிலவிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும்கூட மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் வழங்கிய சிறப்பான ஒத்துழைப்பினை பெரிதும் பாராட்டுகின்றோம்.

நடுவர்களின் தீர்ப்பு இறுதி தீர்ப்பாக அமைந்ததுடன், அந்நடுவர் குழாமானது பல்கலைக்கழக மொழி வல்லுனர்களைக் கொண்டமைந்ததாகும்.

கட்டுரைகளின் மதிப்பீட்டின் போது, சிங்கள மொழிமூல கட்டுரைகள் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சிங்களமொழித் துறைத் தலைவர் பேராசிரியர் சந்தகோமி கோப்பரஹேவா அவர்களின் தலைமையிலும், தமிழ் மொழிமூல கட்டுரைகள் களனிப் பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்புத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கவிதா இராஜரத்தினம் அவர்களின் தலைமையிலும் மற்றும் ஆங்கில மொழிமூல கட்டுரைகள் ருகுணு பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ். ஜீ. எஸ் சமரவீரகே அவர்களின் தலைமையிலும் இடம்பெற்று வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

அதற்கமைவாக சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூலங்களில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற வெற்றியாளர்களுக்கு அரசகரும மொழிகள் ஆணைக்குழு மற்றும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டமானது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

வெற்றியாளர்கள் – கனிஷ்ட பிரிவு

வெற்றியாளர்கள் – சிரேஷ்ட பிரிவு

வெற்றிபெற்ற ஆக்கங்களை வாசிப்பதற்கு இங்கே சொடுக்கவும்

[pdfjs-viewer url=”https://www.nleap.lk/wp-content/uploads/2022/09/Booklet-Winning-Essays.pdf” attachment_id=”3246″ viewer_width=100% viewer_height=800px fullscreen=true download=true print=true]
Spread the love