மொழித்துறையின் பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் தொடர்பில் முனைப்புடன் ஈடுபடுகின்ற பிரதானிகளின் வலையமைப்பாக்கல் (Networking) அங்குரார்ப்பணக் கூட்டம் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் தலைமையில் இடம்பெற்றது.
அரச சேவைகளில் பாலின உணர்திறன்மிக்க இருமொழி வழங்கலை உறுதிப்படுத்துவதற்கான மைல்கல். தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் அதன் பங்காளி நிறுவனங்களில் பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் தொடர்பில் முனைப்புடன் செயற்படுகின்ற பிரதானிகளின் வலையமைப்பாக்கக் கூட்டத்தினை பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவின் பூரண ஒத்துழைப்புடன் 2022 செப்டம்பர் 29 ஆம் திகதி தேசிய மொழிகள் பிரிவின் மாநாட்டு அறையில் நடாத்தியது....