
பெண்களின் கல்வி ஆய்வு நிறுவனம் (WERC) மொழிக் கொத்தணிகளுக்கு GEWE பற்றிய செயலமர்வினை ஏற்பாடு செய்தது.
தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் (NLEAP) விரைவான துலங்கல் நிதியைப் பெறுகின்ற WERC நிறுவனம், மத்திய மாகாணத்தின் மொழிக் கொத்தணிகளுக்கு அண்மையில் GEWE தொடர்பான செயலமர்வுகளை ஏற்பாடு செய்திருந்தது. மொழிக் கொத்தணிகள் என்பது அடிமட்டச் சமூகங்களுக்கு மத்தியில் மொழி உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக பயிற்சியளிக்கப்பட்ட சமூகத் தலைவர்களைக் கொண்ட ஒரு குழுவாகும். இவர்கள் வெவ்வேறு இன மற்றும் மதக் குழுக்களுக்கு மத்தியில் மொழிகளினூடாக சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக முக்கியமானதொரு வகிபாகத்தை நிறைவேற்றுகின்றனர். நாடு முழுவதிலும் இருக்கின்ற மொழிக் கொத்தணிகளை பலப்படுத்தவும், புத்துயிராக்கவும் அல்லது புதிதாக மொழிக் கொத்தணிகளை தொடங்கவும் NLF அதன் பங்காளி நிறுவனங்களான மலைநாட்டு சமூக நடவடிக்கை மத்திய நிலையம் (UPSAC), அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையம் (SLCDF), மனித அபிவிருத்தி அமைப்பு (HDO), அம்பாறை அரச சார்பற்ற அமைப்புக்களின் கூட்டமைப்பு, ஆறுதல் நிறுவனம், மனித உரிமைகள் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனம் (CHRCD) மற்றும் PALM foundation ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளும் முன்னெடுப்புக்களுக்கு NLEAP தேசிய மொழிகள் நிதியத்தினூடாக ஒத்துழைக்கின்றது. மேலும் NLF பங்காளி நிறுவனங்கள் மொழிக் கொத்தணிகளுடன் இணைந்து நடைமுறைப்படுத்தும் முன்னெடுப்புக்களில் அரச கரும மொழிகள் கொள்கை தொடர்பான விழிப்புணர்வினை ஊக்குவிப்பதில் மாத்திரமல்லாது மொழி உரிமை மீறல்களை அடையாளப்படுத்தி அறிக்கையிடுவதற்கான இயற்றிறனைக் கட்டியெழுப்புதல் மற்றும் இரண்டாம் மொழிக் கற்றலுக்கு ஒத்துழைப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்படுகின்றது.
அவ்வகையில், மொழிகளில் பாலின எண்ணக்கரு ஏற்படுத்தும் தாக்கம் பற்றி அடிமட்ட மக்களின் புரிதலைக் கட்டியெழுப்புவதற்கு WERC நிறுவனத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட பாலின உணர்திறனுடன் துலங்கும் வேலைத்திட்டங்கள் துணைபுரியும். அந்தவகையில், மொழிக் கொத்தணிகளுக்கு மொழி உரிமைகள் மற்றும் GEWE ஆகிய இரு எண்ணக்கருக்களுக்கிடயில் எவ்வாறு இணைப்பினை ஏற்படுத்தலாம் என்பதை தெளிவுபடுத்தும் குறிக்கோளுடனேயே GEWE அமர்வுகள் திட்டமிடப்பட்டிருந்தன. மத்திய மாகாணத்தில் இடம்பெற்ற சிங்களம் மற்றும் தமிழ் மொழி பாலின உணர்திறன் அமர்வுகளில் தேசிய மொழிகள் நிதியத்தின் பங்காளி நிறுவனங்களான HDO, SLCDF, UPSAC மற்றும் PALM foundation ஆகியவற்றின் GEWE குவிமையக் குழுக்களும் இப் பங்காளி நிறுவனங்களின் ஒத்துழைப்பினைப் பெறுகின்ற ஒவ்வொரு மொழிக் கொத்தணிகளின் 2 பிரதிநிதிகளும் பங்கேற்றனர். சிங்கள மொழி மூலமான செயலமர்வின் GEWE அமர்வினை NLEAP பாலின சமத்துவ நிபுணர் சாமா ராஜகருணா அவர்களால் நெறிப்படுத்தப்பட்டதுடன் அரசகரும மொழிகள் கொள்கை அமர்வினை NLEAP பிரதிப் பணிப்பாளர் மாரிமுத்து திருநாவுக்கரசு அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. மேலும், தமி்ழ் மொழி மூலமான பாலின உணர்திறன் அமர்வு அம்மணி. மங்களா சங்கர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடல் அமர்வுகளில் பங்கேற்பாளர்களுக்கு அரசகரும மொழிகள் கொள்கை பற்றி இற்றைப்படுத்திய விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள வாய்ப்புக் கிட்டியதுடன் தமது மொழி உரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் போது பாலின எண்ணக்கரு பல்வேறு சமூகங்களில் எவ்வாறான தாக்கத்தினை ஏற்படுத்துமென விளங்கிக்கொள்ளவும் சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த வகையில், மொழி்க் கொத்தணிகளால் நடாத்தப்படுகின்ற நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் பயிற்சிகளில் பாலின எண்ணக்கரு தொடர்பிலான ஒரு அமர்வினை இணைத்துக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் இங்கு வலியுத்தப்பட்டது.
அந்த வகையில், WERC, தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் மற்றும் அதன் NLF பங்காளி நிறுவனங்களுடன் இணைந்து 69 மொழிக் கொத்தணிகளின் 150 அங்கத்தவர்களைப் பயிற்றுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். எனவே, மொழிக் கொத்தணிகளுக்கு பாலின எண்ணக்கரு மொழி உரிமைகளுடன் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது என்ற ஆழமான புரிந்துணர்வுடன் தத்தமது பிரதேசங்களில் பாலின உணர்திறன்மிக்க இருமொழி சமூகங்களைக் கட்டியெழுப்புவதற்கு மிகவும் முக்கியமானதொரு வகிபாகத்தினை நிறைவேற்றலாம் என்பதில் ஐயமில்லை.