என்எல்ஈஏபி பற்றி

பின்னணி

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுக் செயற்றிட்டம் (NLEAP) கனடா அரசாங்கம் வழங்கும் 10.85 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் நாலரை வருடங்களுக்கு நடத்தப்படவுள்ள நிகழ்ச்சித்திட்டமாகும். இலங்கை அரசாங்கச் செயற்படுனர்களினால் இலங்கை அரசகரும மொழிக்கொள்கையின் அமுல்படுத்தலை வலுப்படுத்துவதற்காகவே இக்செயற்றிட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொழி உரிமைகளை முன்னுரிமைப்படுத்துவதன் மூலமும் பரந்த மனித உரிமைகள் மற்றும் பால்நிலைச் சமத்துவத்தினை முன்னுரிமைப்படுத்துவதன் மூலமும் சகல பிரசைகளினதும் மொழி உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்தும் இலங்கை தேசிய அரசாங்கத்தின் இலக்கிற்கு செயற்றிட்டம் ஆதரவளிக்கின்றது. பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் அதன் இணை நிறுவனங்களான மொழிக்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய நிறுவனம் (NlLET), அரசகரும மொழிகள் திணைக்களம் (DOL), அமுல்படுத்தலை மேற்பார்வை செய்யும் பாராளுமன்ற அமைப்பு மற்றும் அரசகரும மொழிகள் ஆணைக்குழு (DOL), ஆகியவற்றினால் அரசகரும மொழிக் கொள்கை அமுல்படுத்தப்படுவதற்கு ஆதரவு
வழங்குவதன் மூலம் இது அடையப்படும்.

முன்பு கனேடிய அரசாங்கத்தினால் நிதியுதவி வழங்கப்பட்ட தேசிய மொழிகள் செயற்றிட்டம் (NLP) 2010 முதல் 2015 வரையான காலப்பகுதியில் ஈட்டிய அடைவுகளில் இருந்து NLEAP செயற்றிட்டம் கட்டமைத்துச் செல்லும். மொழி உரிமைகளைப் பரந்தவகையில் உள்ளடக்குவதற்கு எடுக்கும் முயற்சிகளின் மூலம் நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை மற்றும் சமாதானம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றினைப் போஷிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் அபிலாசைகளுக்கு உதவுதற்கான கனடாவின் கடப்பாட்டினை இது பிரதிநிதித்துவம் செய்கின்றது. அரசகரும மொழிக்கொள்கையின் அமுல்படுத்தலின் மூலம் அரசியலமைப்பு மொழி உரிமைகளை முன்னேற்றகரமாக அடைந்துகொள்வதற்கான தனது கடப்பாட்டினை இலங்கை அரசாங்கம் செயற்திறனுடன் எடுத்து விளக்குவதற்கான ஓர் ஊடகத்தினை இக்செயற்றிட்டம் வழங்குகின்றது. குளோபல் எபயார்ஸ் கனடாவினால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் கனடா அரசாங்கத்திற்கும் தேசிய ஒருமைப்பாடு, அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் உருவான இருதரப்பு உடன்படிக்கையின் பலனாகவே இக்செயற்றிட்டம் உருவானது. 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பூர்த்திசெய்யப்பட்ட போட்டித் தன்மைமிக்க கேள்விகோரல் செயன்முறையினைத் தொடர்ந்து செயற்றிட்டத்தின் அமுல்படுத்தல் அலினியா இன்டர்நேஷனல் அளிக்கப்பட்டது.

 

 

Spread the love