இணைந்த நிறுவனங்கள்

இலங்கை

அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

சகல அரசாங்க அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களினுள் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள்; மற்றும் சகல தொடர்புடைய விடயங்கள் பற்றிய கொள்கைகளையும் நிகழ்ச்சித்திட்டங்களையும் செயற்றிட்டங்களையும் உருவாக்குவதற்கான ஆணையினை அமைச்சுக் கொண்டுள்ளது. அரசகரும மொழிகள் கொள்கையினை உருவாக்கி அமுல்படுத்தல் தொடர்பான அதேபோல சமுதாயங்களுக்கிடையில் கூட்டொருமை மற்றும் சகவாழ்வு

ஆகியவற்றிற்கு ஆதரவு வழங்கும் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் செயற்பாடுகளை அறிமுகப்படுத்தி அமுல்படுத்தல் தொடர்பான விடயங்களைக் கையாளும் பொறுப்பினை அமைச்சுக் கொண்டுள்ளது.

அரசகரும மொழிகள் திணைக்களம் (DOL)

அரசகரும மொழிகளான தமிழ் மற்றும் சிங்களத்திலும் இணைப்பு மொழியான ஆங்கிலத்திலும் அரச துறைகளினுள் மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்பு தொடர்பில் தராதரங்களை உறுதிப்படுத்த நிறுவப்பட்ட நியதிச்சட்ட நிறுவனமே அரசகரும மொழிகள் திணைக்களமாகும். இத்திணைக்களம் பின்வருவனவற்றிற்கான ஆணையினைக் கொண்டுள்ளது: அரசகரும மொழி ஆற்றலைப் பெற்றுக்கொள்ளவேண்டிய அரசாங்க ஊழியர்களுக்கு எழுத்து மூலமான மற்றும் வாய்மொழி மூலமான பரீட்சைகளை நடத்துதல், தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அரசாங்கத்திற்கு மொழிபெயர்ப்புச் சேவையினை வழங்கல், மும்மொழி அகராதிகள் உள்ளடங்கலாக பல்வேறு விடயத் தலைப்புக்களில் அகராதிகளைத் தொகுத்தல், தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வகுப்புக்களை நடத்துதல், இலங்கை அரசாங்கத்திற்கு வெளியேயான நிறுவனங்களின் பணியாளர்களுக்கு மொழி ஆற்றல் பரீட்சைகளை தொழில்வாண்மை ரீதியாகக் கண்காணித்தல், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்பு நிகழ்ச்சித்திட்டங்களில் இருந்து வெளிவரும் மாணவர்களுக்கு நடைமுறைப் பயிற்சிகளை வழங்கல்.

அரசகரும மொழிகள் ஆணைக்குழு (OLC)

அரசகரும மொழிகளின் பயன்பாடு தொடர்பாகக் கொள்கைக் கோட்பாடுகளைப் பரிந்துரைப்பதும் அரசியலமைப்பின் அத்தியாயம் நான்கின் ஏற்பாடுகளுக்கு இயைபுறுவதனை மேற்பார்வை செய்வதுமே ஆணைக்குழுவின் ஆணையாகும். அரசகரும மொழிகளின் மேம்பாடு மற்றும் மெச்சுதல் ஆகியவற்றினையும் அவற்றின் அந்தஸ்து, சமத்துவம் மற்றும் பயன்பாட்டின் உரிமை ஆகியவற்றின் அங்கீகாரம், பேணுகை மற்றும் தொடர்ச்சி ஆகியவற்றினையும் உறுதிப்படுத்துவதையும் ஆணை உள்ளடக்குகின்றது. இறுதியாக, ஆணைக்குழு விசாரணைகளை நடத்துவதற்கும் தனித்துவமான அதிகாரத்தினைக் கொண்டுள்ளது – தனது சொந்த முன்னெடுப்பின் பேரிலும் கிடைத்த முறைப்பாடுகளின் பேரிலும் விசாரணைகளை நடத்தி பரிகார நடவடிக்கைகளை எடுத்தல். இந்த விடயங்கள் 1991 ஆம் ஆண்டின் அரசகரும மொழிகள் ஆணைக்குழுச் சட்டத்தில் உள்ளடங்கியுள்ளன.

மொழிக் கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய நிறுவனம் (NILET)

சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தரமான பயிற்சியினை வழங்கும் ஆணை NILET இற்கு வழங்கப்பட்டுள்ளது. மொழிப் பயிற்சி தொடர்பான ஆய்வுகளை நடத்துவதற்கும் மொழிகள் தொடர்பான தகவல் களஞ்சியத்தினைப் பேணுவதற்கும் தகைமயுள்ள போதிய மொழிபெயர்ப்பாளர்களையும் உரைபெயர்ப்பாளர்களையும் உருவாக்குவதற்கும் தேவைக்கேற்ப மனிதர்களில் விசேட தேவையுடைய வகையினருக்கு மொழிக் கற்கைநெறியினை நடத்துவதற்கும் நிறுவனம் மேலதிக ஆணையினைக் கொண்டுள்ளது.

கனடா

கனேடியப் பாரம்பரியத் திணைக்களம்

கனேடிய “அடையாளம் மற்றும் விழுமியங்கள், கலாசார அபிவிருத்தி மற்றும் பாரம்பரியம்” ஆகியவற்றினைப் போஷித்து மேம்படுத்துவதில் திணைக்களத்தின் ஆணை மையங்கொண்டுள்ளது. குறிப்பாக அரசகரும மொழிகள் ஆணையினைப் பொறுத்த அளவில், கனடாவின் இரண்டு அரசகரும மொழிகளுக்கு ஆதரவு வழங்கி மேம்படுத்துவதற்கான மற்றும் அரசகரும மொழிகள் சிறுபான்மைச் சமுதாயத்தின் இன்றியமையாத தன்மைக்கு ஆதரவு வழங்கி மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் கடப்பாட்டினை உள்ளடக்கியுள்ள அரசகரும மொழிகளுக்கான செயற்திட்டத்திற்குத் திணைக்களம் பொறுப்பாக உள்ளது. மாகாண மற்றும் பிராந்திய அரசாங்கங்கள், அரச நிறுவனங்கள், தனியார் துறை, ஆக்கத்திறன்மிக்க தொழில் முயற்சிகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் ஆகியவை உள்ளிட்ட பரந்த வீச்சிலான பங்காளர்களுடன் திணைக்களம் ஒத்துழைத்துச் செயற்படுகின்றது.

கனேடிய திறைசேரிச் சபை – ஆளுகை, திட்டமிடல் மற்றும் கொள்கைத் துறை – அரசகரும மொழிகள்

ஆளுகை, திட்டமிடல் மற்றும் கொள்கைத் துறை – அரசகரும மொழிகள் ஊடாக கனடாவின் திறைசேரிச் சபை இரண்டு அரசகரும மொழிகளிலும் சகல பெடரல் அமைச்சுக்களும் அரசாங்கத்தின் சேவைகளை வழங்குவதை மேற்பார்வை செய்கின்றது. அரசகரும மொழிகளின் விருத்தி மற்றும் கண்காணிப்புக்கும் மற்றும் தெரிவுக்குரிய மொழியில் எவ்வாறு தொடர்பாடுவது மற்றும் எவ்வாறு சேவைகளை உறுதிப்படுத்துவது, இரண்டு மொழிகளினதும் செயற்திறன்மிக்க பயன்பாட்டிற்கு உகந்த வேலைச் சூழலை எவ்வாறு உருவாக்கிப் பேணுவது மேலும் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழி பேசும் கனேடியர்களுக்கு சமமான தொழில்வாய்ப்பு மற்றும் மேம்பாட்டு வாய்ப்புக்களை எவ்வாறு வழங்குவது என்பது பற்றிய கொள்கைகள் மற்றும்  வழிகாட்டல்களை உருவாக்குவதற்கும் துறை பொறுப்பாக இருக்கும்.

கனடா மொழிபெயர்ப்புப் பணியகம்

மொழிபெயர்ப்புச் சேவை மற்றும் மொழியியற் சேவைகளில் கனடா மொழிபெயர்ப்புப் பணியகம் (TBC) பெடரல் அரசாங்கத்தின் நிபுணத்துவக் கேந்திரமாகத் திகழ்கின்றது. இதுவே தேசிய பாராளுமன்றத்திற்கு மொழிபெயர்ப்பு, மீளாய்வு மற்றும் உரைபெயர்ப்புச் சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக சேவை வழங்குனராகக் காணப்படுகின்றது. பணியகம் உலகின் முன்னணி மொழிபெயர்ப்பு நிறுவனங்களில் ஒன்றாகக் காணப்படு கின்றது. கனடா அரசாங்கத்துடன் சொற்பதவியல் தரப்படுத்தல் வகிபாத்திரத்தினை வகித்தல், அரசாங்கச் செயற்பாட்டின் வெவ்வேறு பரப்புக்களில் பயன்படுத்தப்படும் சொற்களைத் தரப்படுத்தல், மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்புச் சேவைகளையும் உரைபெயர்ப்பாளர் சேவைகளையும் வழங்குதல் அத்துடன் இந்தச் சேவைகளுக்கு உதவி வழங்கும் கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்தினை வழங்குதல் ஆகியவற்றிற்கும் பணியகம் பொறுப்பாக இருக்கின்றது.

நீதி அமைச்சு – இரண்டு அரசகரும மொழிகளிலும் நீதிக்கான அணுகல் நிகழ்ச்சித்திட்டம்

இரண்டு அரசகரும மொழிகளிலும் நீதியினை அணுகுவதை வசதிப்படுத்துவதற்கான வளங்களை வழங்குகின்ற உதவி நிதியினை நிகழ்ச்சித்திட்டம் நிர்வகித்து வருகின்றது. சட்ட மற்றும் மொழியியல் கருவிகளை உருவாக்கல், இருமொழிச் சட்டத்தரணிகள் மற்றும் நீதி முறைமையின் பங்கீடுபாட்டாளர்கள் ஆகியோருக்கு செயலமர்வுகளையும் பயிற்சியினையும் வழங்குதல் , சம்பந்தப்பட்ட பயிற்சி ஆவணங்களைத் தயாரித்தல், பொதுச் சட்டக் கல்வி மற்றும் தகவல்கைள வழங்குதல் போன்ற பல்வேறு வழிவகைகள் மூலம் இது மேற்கொள்ளப்படுகின்றது. நிகழ்ச்சித்திட்டத்தினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளும் செயற்றிட்டங்களும் மொழியியல் இரட்டை அம்சத்தில் சகல கனேடியர்களினதும் பங்கேற்பினை ஊக்கப்படுத்தும் மற்றும் அரசகரும மொழிகள் சிறுபான்மைச் சமுதாயங்களிற்கு உதவும் அரசாங்கத்தின் கடப்பாட்டுடன் ஒத்திசைவானவையாகும்.

அரசகரும மொழிகள் ஆணையாளரின் அலுவலகம் (OCOL)

பாராளுமன்ற உத்தியோகத்தர் என்கின்ற ரீதியிலும் மாற்றத்திற்கான முகவர் என்கின்ற ரீதியிலும்  அரசகரும மொழிகள் சட்டத்தின் அமுல்படுத்தலை மேம்படுத்தி மேற்பார்வை செய்வதற்கான ஆணையினை ஆணையாளர் கொண்டிருக்கின்றார். அரசகரும மொழிகள் ஆணையாளரின் பிரதான குறிக்கோள்கள்: பாராளுமன்றத்தில் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தின் சமத்துவம், கனடா அரசாங்கம், பெடரல் நிர்வாகம் மற்றும் நிறுவனங்கள் ஆகியவை சட்டத்திற்கு உட்படுதல், கனடாவில் அரசகரும மொழிச் சிறுபான்மையினரின் விருத்தி மற்றும் இன்றியமையாத தன்மை, கனேடிய சமூகத்தில் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகியவற்றின் சமமான அந்தஸ்து.

அரசகரும மொழிகள் பற்றிய பொதுமக்கள் சபை நிலையியற் குழு

சட்டத்தின் நிர்வாகத்தினையும் ஒழுங்குவிதிகளையும் நெறிப்படுத்தல்களையும் மீளாய்வு செய்வதற்கும் அரசகரும மொழிகள் ஆணையாளர் அலுவலகத்தினதும் திறைசேரிச் சபையினதும் கனேடியப் பாரம்பரியத் திணைக்களத்தினதும் வருடாந்த அறிக்கைகளை மீளாய்வு செய்வதற்கும் அரசகரும மொழிகள் சட்டத்தினால் தேவைப்படுத்தப்பட்டவாறு பொதுமக்கள் சபை நிலையியற் குழு ஸ்தாபிக்கப்பட்டது.  குழுவில் சகல அரசியற் கட்சிகளும் பிரதிநிதித்துவம் செய்யப்படும்.

ஓட்டாவா பல்கலைக்கழகம் – அரசகரும மொழிகள் மற்றும் இருமொழி நிறுவனம் (OLBI)

ஓட்டவா பல்கலைக்கழகம் வட அமெரிக்காவின் பழமையான மிகப் பெரிய பல்கலைக்கழகமாகும். இருமொழியியலுக்கும் ஒண்டாரியோவின்; பிரெஞ்சுக் கலாசாரத்தினை மேம்படுத்துவதற்கும் பல்கலாசாரவியலுக்கும் பல்கலைக்கழகம் கடப்பாடு கொண்டுள்ளது. மொழிக் கற்பிப்பு, மதிப்பீடு மற்றும் மொழிக் கற்கை வடிவமைப்பு ஆகிய பரப்புக்களில் பல்கலைக்கழகம் கல்வி மற்றும் ஆய்வு ஆகியவற்றினை வலுப்படுத்தி மேம்படுத்துகின்றது. அரசகரும மொழி மற்றும் இருமொழியியலில் பல்கலைக்கழகத்தின் நிபுணர்களைப் பல்கலைக்கழகம் நான்கு பரப்புக்களில் ஒன்று சேர்க்கின்றது: கற்பித்தல், ஆய்வு, பரிசீலனை மற்றும் மதிப்பீடு, அபிவிருத்தி மற்றும் மேம்பாடு

ஓட்டாவா பல்கலைக்கழகம் – மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்பிற்கான கல்லூரி (STI)

மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்பிற்கான கல்லூரியானது வேலைத்தளங்களில் நிலவும் பல வாய்ப்புக்களை கல்லூரியின் மாணவர்கள் பயன்படுத்துவதற்கு உதவ பல்வேறு வித்தியாசமான நிகழ்ச்சித்திட்டங்களை வழங்குகின்றது. பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்ப்பதற்கு பூரண ஒன்லைன் சான்றிதழ், பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழிகளில் இரண்டு கலைமானி நிகழ்ச்சித்திட்டங்கள் அதேபோன்று ஸ்பானிய மொழி உள்ளிட்ட மும்மொழித் தெரிவு; மாநாட்டு உரைபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்ப்புக் கற்கையில் இரண்டு ஆய்வு நிகழ்ச்சித்திட்டங்கள் மேலும் மொழிபெயர்ப்புக் கற்கையில் PhD.

பிரெஞ்சு மொழி பேசும் மக்களின் விவகாரங்களுக்கான அமைச்சு – ஒண்டாரியோ அரசாங்கம்

ஒண்டாரியோவின் பிரெஞ்சு மொழி பேசும் சமுதாய மக்கள் அவர்களின் அரசாங்க சேவைகளைப் பிரெஞ்சு மொழியில் பெறுகின்ற அதேவேளை தமது மொழியியல் மற்றும் கலாசாரப் பாரம்பரியங்களைப் பேணி அதன் மூலம் மாகாணத்தின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வினில் அவர்கள் பங்குபற்றக்கூடியவர்களாக இருக்கின்றனர் என்பதை அமைச்சு உறுதிப்படுத்துகின்றது. அமைச்சின் பிரதான பொறுப்புக்களாவன: ஒண்டோரியாவில் வாழும் பிரெஞ்சு மக்களுக்கு ஆதரவு வழங்கும் பிரெஞ்சு மொழிச் சேவைகளையும் கொள்கைகளையும் நிகழ்ச்சித்திட்டங்களையும் விருத்தி செய்தல், பிரெஞ்சு பேசும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் பிரெஞ்சு மொழிச் சேவை விநியோகம் தொடர்பாகவும் ஏனைய அமைச்சுக்களுக்கு ஆலோசனை வழங்கல் மற்றும் ஒண்டோரியாவில் வாழும் பிரெஞ்சு மக்களை அரசாங்க அமைச்சுக்களுடனும் முகவர்களுடனும் இணைத்தல்.

ஓண்டோரியாவின் பிரெஞ்சு மொழிச் சேவை ஆணையாளர் அலுவலகம்

பிரெஞ்சு மொழிச் சேவைகள் ஆணையாளர் ஒண்டோரியாவின் சட்டவாக்க சபையின் சுயாதீன அதிகாரியாவார் என்பதுடன் இவர் அதன் நேரடியான கட்டுப்பாட்டின் கீழுள்ளவராவார். ஓண்டோரியோப் பிரசைகளின் உரிமைகளும் அரசாங்கத்தினதும் அரசாங்க முகவர்களினதும் கடப்பாடுகளும் பிரெஞ்சு மொழிச் சேவைச் சட்டத்திற்கு அமைவாக மதிக்கப்படுகின்றன என்பதை ஆணையாளர் உறுதிப்படுத்துகின்றார். பிரெஞ்சு மொழியில் சேவைகள் வழங்கப்படுவதை முன்னேற்றுவதற்கு அலுவலகம் பரிந்துரைகளை வழங்குவதுடன் முன்னேற்றத்தினையும் கண்காணிக்கின்றது. முறைப்பாடுகளைத் தொடர்ந்து அது சுயாதீனமான விசாரணைகளை நடத்துவதுடன் தனது சொந்த முன்னெடுப்பின் பேரிலும் விசாரணைகளை முன்னெடுக்கின்றது. அத்துடன் அறிக்கைகளைத் தயாரிப்பதுடன் சட்டத்துடன் இயைபுறுவதனை மேம்படுத்துமாறு அரசாங்கத்திற்கும் அரசாங்க முகவர்களிற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஆலோசனை வழங்குகின்றது.

அரசாங்கத்திற்கு இடையிலான விவகாரங்களுக்கான அமைச்சு – பிரெஞ்சு மொழி பேசும் சமுதாயத்தினர் மற்றும் அரசகரும மொழிகள் கிளை – நியூ பிரன்ஸ்விக் அரசாங்கம்

அரசாங்கத்திற்கு இடையிலான விவகாரங்களுக்கான அமைச்சு நியூ பிரன்ஸ்விக் மற்றும் ஏனைய மாகாணங்களுடனான மற்றும் பெடரல் அரசாங்கத்துடனான உறவுகளுக்கும் சர்வதேச உறவுகளுக்குமான பொறுப்பினைக் கொண்டுள்ளது. இக்கிளையின் ஆணை ஏனைய மாகாண அரசாங்கத் திணைக்களங்கள், சமுதாய மற்றும் அரசாங்கக் கட்டுப்பாட்டின் கீழுள்ள நிறுவனங்கள். அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை ஆகியவற்றுடன் நியூ பிரன்ஸ்விக்கில் பிரெஞ்சு மொழிபேசும் மக்களின் நலன்களை மேம்படுத்துவதற்கும் அரசகரும மொழியினை மேம்படுத்துவதற்கும் நியூ பிரன்ஸ்விக் அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதாகும். அரசகரும மொழிகள் சேவையின் ஏற்பாடுகள் பற்றிய நிகழ்ச்சித்திட்டங்களின் முகாமைத்துவத்திற்கும் கிளை பொறுப்பானதாகும்.

மொழிபெயர்ப்புப் பணியகம் – நியூ பிரன்ஸ்விக்  அரசாங்கம்

நியூ பிரன்ஸ்விக் மொழிபெயர்ப்புப் பணியகம் நிறைவேற்றுக் கவூன்சில் அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ளது. நியூபிரன்ஸ்விக்கின் அரசகரும மொழிகள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ​பணியகமானது அரசாங்கம் இருமொழிச் சேவைக்கான அதன் கடப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்கு உதவுகின்றது. எழுத்து மூலமான மொழிபெயர்ப்புக்கள் மற்றும் மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் ஏனைய ஒன்றுகூடல்கள் ஆகியவற்றிற்கான  சமகால உரைபெயர்ப்பு மற்றும் நீதிமன்ற விசாரணைகளின் போதான உரைபெயர்ப்பு மற்றும் நிர்வாக நியாயமன்ற விசாரணைகளின் போதான மொழிபெயர்ப்பினையும்  ஏனைய மொழியியற் சேவைகள் போன்ற சேவைகளையும்; பணியகம் வழங்குகின்றது. மேலும் சட்டவாக்க சபை மற்றும் குழுக்களின் அமர்வுகளின் போதும் பணியகம் உரைபெயர்ப்பினை வழங்குகின்றது.

நியூபிரன்ஸ்விக் அரசகரும மொழிகள் ஆணையாளரின் அலுவலகம்

அரசகரும மொழிகள் ஆணையாளர் நியூபிரன்ஸ்விக் சட்டவாக்க சபையின் சுயாதீன முகவராவார். அரசாங்க நிறுவனங்கள் வழங்குகின்ற அரசகரும மொழிகள் மற்றும் சேவைகள் தொடர்பாகப் பொதுமக்கள் வழங்குகின்ற முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கான ஆணையினை அலுவலகம் கொண்டுள்ளது. விசாரணையினைத் தொடர்ந்து, சட்டத்திற்கு இயைபுறுவதனை உறுதிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பரிந்துரைகள் அல்லது திருத்தங்களை ஆணையாளர் மேற்கொள்ளலாம். மாகாணத்தில் இரண்டு அரசகரும மொழிகளினதும் மேம்பாட்டினை முன்னேற்றுவதற்கான ஆணையினை அலுவலகம் கொண்டுள்ளது.

டயலொக் NB

நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தினை மிகுந்த சமூக ஒத்திசைவுமிக்க சமுதாயமாக மாற்றுவதற்கு உதவுவதற்காக தன்னார்வப் பணிப்பாளர்கள் சபையின் வழிநடத்தலில் இயங்கும் இலாபநோக்கற்ற நிறுவனமே டயலொக் NB ஆகும். சகல மக்களையும் சமூகத்தின் பெறுமதிமிக்க உறுப்பினர்களாக மதித்துக் கொண்டாடுவதற்கு மிகுந்த சௌஜன்யத்துடன் ஒன்றுசேர்ந்து வாழ்வதற்கு சமுதாயங்களுக்கு அகத்தூண்டுதல் வழங்க உதவுவதற்கு நிறுவனம் நிகழ்ச்சித்திட்டங்களையும் முன்னெடுப்புக்களையும் உருவாக்குகின்றது. மாகாணத்தின் சமூக ஒத்திசைவிற்குப் பங்களிப்பு வழங்குவதே இறுதியான எதிர்பார்ப்பாகும்.