“நான் எனது தாய்மொழியை நேசிப்பதுடன் பிறமொழிகளிற்கும் மதிப்பளிக்கின்றேன்”

அரச கரும மொழிகள் வாரத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட அகில இலங்கை கட்டுரைப் போட்டியின் விருது வழங்கும் வைபவத்தினை அரச கரும மொழிகள் ஆணைக்குழு நடாத்துகின்றது. ஒவ்வொரு வருடமும் ஜுலை 01 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரை  கொண்டாடப்படுகின்ற அரச கரும மொழிகள் வாரத்தை முன்னிட்டு அரச கரும மொழிகள் ஆணைக்குழு (OLC) தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்துடன் (NLEAP) இணைந்து நடாத்திய அகில இலங்கை...

Read More >

அரச கரும மொழிகள் கொள்கைக்கான மூலோபாய வரைவுத்திட்டத்தை செயற்பாட்டு வடிவில் கொண்டு வருவதற்கு ஒன்றிணைந்து திட்டங்களைத் தயாரித்தல்.

மொழித்துறையில் முனைப்புடன் செயற்படும் பிரதானிகள் மூலோபாய வரைவுத்திட்டத்தின் அடிப்படையில் இடைக்கால – நீண்டகாலத் திட்டங்களைத் தயாரிப்பதற்கென சந்திக்கின்றனர். அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவு (அமைச்சு) இடைக்காலத் திட்டங்களைத் தயார்செய்வது தொடர்பாக கலந்துரையாடல்களை நடாத்தவும், அரச கரும மொழிகள் கொள்கையின் அமுல்படுத்துகை தொடர்பான மூலோபாய வரைவுத் திட்டத்துக்கான நீண்ட காலத் திட்டங்களின் ஆரம்பக் கட்டப் பணிகளைத் தீர்மானிப்பதற்குமென அரச கரும மொழிகள் திணைக்களம்...

Read More >

மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்புக்கான தொழில்சார் கற்றல் சமூகம் நேரடியாகப் பங்கேற்கும் முதலாவது கூட்டம்.

இலங்கையில் மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்புச் சேவைகளை தொழில்மயப்படுத்துவதற்காக ஒன்றிணைந்து செயற்படுதல். நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த தொழில்சார் கற்றல் சமூகத்தின் நேரடிப் பங்கேற்புடனான முதலாவது கூட்டம் 2022, ஜுன் மாதம் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் சீகிரியாவில் அமைந்துள்ள சீகிரிய ஜன்கல் ஹோட்டலில் இடம்பெற்றது. இரண்டு நாட்கள் வதிவிட நிகழ்ச்சித்திட்டமாக இடம்பெற்ற இந்நிகழ்வில் நான்கு வருட மொழிபெயர்ப்புக் கலைமானிப் பட்டப்டிப்பினை வழங்குகின்ற நான்கு பல்கலைக்கழகங்களின் கல்வியியலாளர்கள் பங்கேற்றனர். தொழில்சார் கற்றல் சமூகம்...

Read More >

இரண்டாம் மொழிக் கல்வியில் பால்நிலைக்குக் துலங்கல் காண்பிக்கும் தலைமைத்துவத்தையும் நிர்வாகத்தையும் ஊக்குவித்தல்.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் (NLEAP) மொழிக்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய நிறுவனத்தினை இலக்காக்கொண்டு (NILET) பால்நிலைக்குத் துலங்கல் காண்பிக்கும்  தலைமைத்துவம் மற்றும் நிர்வாகம் தொடர்பான ஆற்றலைக் கட்டமைத்தல் செயலமர்வினை ஒழுங்குசெய்கின்றது.    தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் (NLEAP) அண்மையில் மொழிக்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய நிறுவனத்தினை இலக்காகக்கொண்டு இரண்டாம் மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பால்நிலைக்குத் துலங்கல் காண்பிக்கும் தலைமைத்துவம் மற்றும் நிர்வாகம் தொடர்பான...

Read More >

செயற்றிட்ட ஒப்படைப்பில் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டின் பயன்களை ஆராய்தல்

கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் சாதாரண செயற்றிட்ட முகாமைத்துவம் தொடர்பாக தேசிய மொழிகள் நிதியப் பங்காளரின் மெய்நிகர் கூட்டமும் கலந்துரையாடலும். தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் (NLEAP) தேசிய மொழிகள் நிதியத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் உதவி பெறும் பங்காளிகளுக்கு மெய்நிகர் தகவல் அமர்வொன்றினை ஒழுங்குசெய்தது. அலீனியா நிறுவனத்தின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுத் துறைசார் நிபுணரான திரு. கய் இன்ஸ் அவர்களின் வழிநடாத்தலின் கீழ் இடம்பெற்ற இத்தொடரில் தேசிய மொழிகள்...

Read More >

பால்நிலைக்குத் துலங்கல் காண்பிக்கும் மொழிபெயர்ப்பாளர்கள் தலைமுறையொன்றினைக் கட்டியெழுப்புதல்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்புத் திணைக்களத்துக்கு தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் (NLEAP) குறிக்கோள் விஜயம். தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் அம்மணி. வீனா வர்மா (செயற்றிட்டப் பணிப்பாளர், மனித உரிமைகள், பாலினம் மற்றும் நல்லாளுகை ஆலோசகர்,  அலீனியா நிறுவனம்)  மற்றும் திரு. ஹிலயர் லெமோய்ன் (மொழிக்கொள்கை ஆலோசகர்/ NLEAP விஷேட ஆலோசகர்/ ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் மொழிக்கொள்கை மற்றும் சர்வதேச உறவுகள், அரச கரும மொழிகள் மற்றும் இருமொழிக்கல்வி...

Read More >

மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் அரச கரும மொழிக்கொள்கையின் வினைத்திறன்மிக்க அமுல்படுத்தலுக்காக பலமானதொரு சிவில் சமூகக் கட்டமைப்பினை நிறுதல்.

தேசிய மொழிகள் நிதியப் பங்காளி நிறுவனத்தின் களவிஜயம்| அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையம் (SLCDF) | காலி மாவட்டம் இரம்மியமானதொரு மாலைப் பொழுதில் தேசிய மொழிகள் நிதியத்தின் பங்காளி நிறுவனமான அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையம் காலி மாவட்டத்தில் அவற்றின் செயற்றிட்டத்தை அமுல்படுத்துவதற்கு பொறுப்பாக செயற்படுகின்ற அணியை சந்திப்பதற்கு தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்ட அணிக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்துகொடுத்தது. அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை...

Read More >

மொழிகளினூடாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல்

தேசிய மொழிகள் நிதியத்திலிருந்து உதவி பெறும் நிறுவனமான ஆறுதல் நிறுவனம் வடக்கு மாகாணத்தில் மொழி உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் மொழிக் கற்றலை மேம்படுத்துவதற்கு நடைமுறைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையிடுகின்றது. “மொழிகள் மிகவும் முக்கியமானவை”. மொழிகள்  எமது கருத்துக்களை அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்ள உதவுகின்றன. அந்த வகையில், தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கும் பல்லினத்தன்மையை கௌரவிப்பதை ஊக்குவிப்பதற்கும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தினால் (NLEAP) நடைமுறைப்படுத்துகின்ற கருத்திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக தேசிய மொழிகள்...

Read More >

மிகச்சிறந்த வகைகூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கட்டியெழுப்புவதற்கான சிறந்த நடைமுறைகளிலிந்து பிரஜை விழிப்புணர்வு மற்றும் ஈடுபாட்டினை மேம்படுத்துவதற்குக் கற்றுக்கொள்ளல்.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் (NLEAP) வருடாந்த அறிக்கையிடல் மற்றும்  பிரதானிகள் மற்றும் அரச கரும மொழி ஆதரவாளர்கள் தொடர்பான  தொழிநுட்பக் கருத்துப் பரிமாற்றல் நிகழ்வுகளுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குகின்றது. வருடாந்த அறிக்கையிடல் தொடர்பான தொழிநுட்பக் கருத்துப் பரிமாற்றல் நிகழ்வில் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் கருத்திட்டப் பணிப்பாளரான திரு. டொன் ப்ரோநெல் அவர்கள் அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள்...

Read More >