தேசிய மொழிகள் நிதியத்தின் வெற்றிகள் | கிரிசாலிஸ் (Chrysalis) | மொழிக்கான உரிமை

இரு மொழி சேவை வழங்கலை வலுவூட்டும் விதத்தில் தேசிய மொழிக் கொள்கையை பயனுறுதியுடன் அமுல்படுத்துதல். சிலோன் தேயிலை உலகிலே மிகவும்  பிரபல்யமாகவும், இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும்  மிகவும் முக்கியமான தொழிற்துறையாக இருந்தாலும் இத்தொழிற்துறையின் முதுகெழும்பாக கருதப்படும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்னுமும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர். தேசிய மொழிகள் நிதியத்தின் பங்காளி நிறுவனமான கிரிஸாலிஸ் பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற, தொழில் புரிகின்ற நலிவடைந்த சமூகங்களின்,  விசேடமாக பெண்கள் மற்றும் இளைஞர்,...

Read More >

மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் அரச கரும மொழிக்கொள்கையின் வினைத்திறன்மிக்க அமுல்படுத்தலுக்காக பலமானதொரு சிவில் சமூகக் கட்டமைப்பினை நிறுதல்.

தேசிய மொழிகள் நிதியப் பங்காளி நிறுவனத்தின் களவிஜயம்| அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையம் (SLCDF) | காலி மாவட்டம் இரம்மியமானதொரு மாலைப் பொழுதில் தேசிய மொழிகள் நிதியத்தின் பங்காளி நிறுவனமான அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையம் காலி மாவட்டத்தில் அவற்றின் செயற்றிட்டத்தை அமுல்படுத்துவதற்கு பொறுப்பாக செயற்படுகின்ற அணியை சந்திப்பதற்கு தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்ட அணிக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்துகொடுத்தது. அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை...

Read More >

மொழிகளினூடாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல்

தேசிய மொழிகள் நிதியத்திலிருந்து உதவி பெறும் நிறுவனமான ஆறுதல் நிறுவனம் வடக்கு மாகாணத்தில் மொழி உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் மொழிக் கற்றலை மேம்படுத்துவதற்கு நடைமுறைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையிடுகின்றது. “மொழிகள் மிகவும் முக்கியமானவை”. மொழிகள்  எமது கருத்துக்களை அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்ள உதவுகின்றன. அந்த வகையில், தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கும் பல்லினத்தன்மையை கௌரவிப்பதை ஊக்குவிப்பதற்கும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தினால் (NLEAP) நடைமுறைப்படுத்துகின்ற கருத்திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக தேசிய மொழிகள்...

Read More >

மிகச்சிறந்த வகைகூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கட்டியெழுப்புவதற்கான சிறந்த நடைமுறைகளிலிந்து பிரஜை விழிப்புணர்வு மற்றும் ஈடுபாட்டினை மேம்படுத்துவதற்குக் கற்றுக்கொள்ளல்.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் (NLEAP) வருடாந்த அறிக்கையிடல் மற்றும்  பிரதானிகள் மற்றும் அரச கரும மொழி ஆதரவாளர்கள் தொடர்பான  தொழிநுட்பக் கருத்துப் பரிமாற்றல் நிகழ்வுகளுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குகின்றது. வருடாந்த அறிக்கையிடல் தொடர்பான தொழிநுட்பக் கருத்துப் பரிமாற்றல் நிகழ்வில் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் கருத்திட்டப் பணிப்பாளரான திரு. டொன் ப்ரோநெல் அவர்கள் அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள்...

Read More >

அரச சேவைகளை அரச கரும மொழிகளில் வழங்குவதற்காக அரச நிறுவனங்களின் இயற்றிறனைத் தொடர்ந்து கட்டியெழுப்புதல்.

தேசிய மொழிப் பிரிவினால்  நாடு முழுவதும் மொழித் திட்டமிடல் மீளாய்வுக் கூட்டத் தொடர்களை நடாத்துகின்றன. 2022 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவு, தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் அனுசரணையில் அரச நிறுவனங்களால் விருத்திசெய்யப்பட்ட மொழித் திட்டங்களை மீளாய்வு செய்வதற்காக கிளிநொச்சி, திருகோணமலை, நுவரெலிய, கண்டி, காலி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நடாத்தப்பட்ட 6...

Read More >

மொழிகளினூடாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக சிவில் சமூக அமைப்புக்களை வலுவூட்டுதல்.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் (NLEAP) தேசிய மொழிகள் நிதியத்தின் 2 ஆம் கட்டத்தின் கீழ் உதவி பெறும் கொடைபெறுநர்களை ஒருங்கிணைக்கவும் அவர்களுக்கிடையில் இணைப்பினை வலுப்படுத்துவதற்காகவும் ஒரு அமர்வினை ஏற்பாடு செய்கின்றது.    தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவுடன் இணைந்து தேசிய மொழிகள் நிதியத்தின் 02 ஆம் கட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில்...

Read More >

பொது மக்களுக்கு இரு மொழிச் சேவைகளை வழங்குவதற்காக நீதி முறைமையின் இயற்றிறனைக் கட்டியெழுப்புதல்.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள மூன்று நீதிமன்றங்கள் மொழித் திட்டமிடலை இலகுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்துகொள்கின்றன. பொது மக்களுக்கு  தாம் விரும்பும் மொழியில் நீதிச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதை  உறுதிப்படுத்துவது ஏதேனுமொரு தேசிய நீதி முறைமையின் செயலூக்கத்துக்கு அவசியமென்பதால்.  மொழித் திட்டமிடல்  செயன்முறையில் நீதி முறைமையின் பங்கேற்பினை வலியுறுத்த வேண்டுமென  அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவு கருதுகின்றது. அந்த வகையிலேயே,  நுவரெலியா மாவட்டத்தின் ஹற்றன் நீதவான்...

Read More >

அரச கரும மொழிகள் கொள்கையின் செயல்முறைப்படுத்தலை அரச சேவை நிறுவனங்களில் மேம்படுத்துவதற்கான புரிதல்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளல்.

கனடா நாட்டின் அரச கரும மொழிகள் செயலகமான கனேடிய திறைசேரிச் சபை மற்றும், அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவுக்கும் இடையிலான தொழிநுட்பக் கருத்துப் பரிமாற்றல் நிகழ்வுகள். அரச கரும மொழிகள் கொள்கையை செயல்முறைப்படுத்துவதற்கான பணிப்பாணை இலங்கை அரசாங்கத்தினால் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவுக்கு உரித்தாக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், 2021 ஆம் ஆண்டின் முதற் காலாண்டில்...

Read More >

அரச கரும மொழிகள் கொள்கையை செயல்முறைப்படுத்துதல்.

அரச கரும மொழிகள் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான மூலோபாய வரைவுத்திட்டத்துக்கான மத்திய காலத் திட்டங்களைத் தயாரிப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் தேசிய மொழிகள் பிரிவினால்  நடாத்தப்படுகின்றன. அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் (அமைச்சு) தேசிய மொழிகள் பிரிவு, தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின்  ஒத்துழைப்புடன் அதன் பங்காளி நிறுவனங்களான அரச கரும மொழிகள் திணைக்களம்(DOL), அரச கரும மொழிகள் ஆணைக்குழு (OLC) மற்றும் மொழிக்கல்வி மற்றும் பயிற்சிக்கான...

Read More >

அரச கரும மொழிகள் ஆணைக்குழு அதன் உத்தியோகபூர்வ வலைத்தளத்தைத் துவக்கி வைக்கின்றது.

மொழி உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வைக் கட்டியெழுப்பவும், மொழி உரிமை மீறல்களுக்குத் தீர்வுகாண பொதுமக்கள் பங்கேற்பினை மேம்படுத்துவதற்குமான தனிச்சிறப்புமிக்க முயற்சி. அரச கரும மொழிகள் ஆணைக்குழு அதன் உத்தியோகபூர்வ வலைத்தளத்தை www.olc.gov.lk/ கௌரவ அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் (அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு) அவர்களின் பூரண ஒத்துழைப்புடன் ஆரம்பித்து வைத்தமை அதன் அடைவுகளில் மிகமுக்கியமானதொரு மைல்கல்லாகும். இந்நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்திய அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின்...

Read More >