கனடா அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் இணைந்து தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் இறுதிச் செயற்குழுக் கூட்டத்தினை நடாத்தியது.
இலங்கையின் அரசகரும மொழிகள் கொள்கையைப் பயனுறுதியுடன் நடைமுறைப்படுத்துவதற்கான கூட்டொத்துழைப்பினைப் பலப்படுத்துதல். தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் மொழித்துறையில் ஈடுபாடுள்ள கரிசணையாளர்கள் மற்றும் கொள்கையாக்கத்தில் அதிகாரமுள்ளவர்களை அழைத்து நடாத்திய இறுதிச் செயற்றிட்டக் குழுக் கூட்டம் பொது நிருவாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவின் மேலதிக செயலாளர் திரு. அநுராதா விஜேகோன் மற்றும் இலங்கையில் அமைந்துள்ள கனடா தூதுவராலயத்தின் அபிவிருத்திப் பிரிவின்...