செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

மொழித்துறையின் பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் தொடர்பில் முனைப்புடன் ஈடுபடுகின்ற பிரதானிகளின் வலையமைப்பாக்கல் (Networking) அங்குரார்ப்பணக் கூட்டம் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் தலைமையில் இடம்பெற்றது.

அரச சேவைகளில் பாலின உணர்திறன்மிக்க இருமொழி வழங்கலை உறுதிப்படுத்துவதற்கான மைல்கல். தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் அதன் பங்காளி நிறுவனங்களில் பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் தொடர்பில் முனைப்புடன் செயற்படுகின்ற பிரதானிகளின் வலையமைப்பாக்கக் கூட்டத்தினை பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவின் பூரண ஒத்துழைப்புடன் 2022 செப்டம்பர் 29 ஆம் திகதி தேசிய மொழிகள் பிரிவின் மாநாட்டு அறையில் நடாத்தியது....

View

அனைவரையும் உள்ளடக்கிய, பாலின உணர்திறனுடைய அரச சேவைகளைக் கட்டியெழுப்புதல் எனும் இலக்கை நோக்கி !

அரச சேவைகள் மற்றும் தொடர்பாடலை மேம்படுத்துவதற்கென விருத்திசெய்துள்ள இரண்டு பயிற்சிக் கைநூல்களை மீளாய்வு செய்வதற்கான கரிசனையாளர் கூட்டங்களுக்கு தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் அனுசரணை வழங்குகின்றது.  தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் கடந்த 2022 செப்டம்பர் 15 ஆம் திகதி கரிசனையாளர் நிபுணத்துவ ஆலோசனை அமர்வினை நடாத்தி அதன் பங்காளி நிறுவனங்களான பொது நிருவாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள்...

View

முன்னேற்றத்தை மீளாய்வுசெய்து எதிர்கால வேலைத்திட்டங்களைத் திட்டமிடுவதற்கென மொழித்துறை உத்தியோகத்தர்கள் சந்திக்கின்றனர்.

வருடாந்த வேலைத்திட்டங்களைத் திட்டமிடுவதற்கான கரிசனையாளர் செயமர்வினை தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் (NLEAP)  நடாத்துகின்றது. தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் வருடாந்த வேலைத்திட்டங்களைத் திட்டமிடுவதற்கென மொழித்துறைப் பாதுகாவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு செப்டம்பர்  மாதம் 06 ஆம் திகதி செயலமர்வொன்றினை நடாத்தியது. இச்செயலமர்வில்  பொது நிருவாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவு (NLD), அரசகரும மொழிகள் ஆணைக்குழு (OLC), அரசகரும...

View

மொழி உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரக கரும மொழிக் கொள்கையை அமுல்படுத்துதல்.

மொழி என்பது அடையாளத்தின் முக்கியமானதொரு சின்னமாகும். அது மனித தொடர்பாடலில் இன்றியமையாத அம்சமாக இருந்து வருகின்றது. அவ்வகையில், ஒவ்வொரு நாடும், அரசாங்கமும்  நாட்டின் அனைத்துப் பிரஜைகளின் மொழி உரிமைகளைப் பேணுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமானது. இலங்கையில் பல்வேறு இனச் சமூகங்களின் அதிகாரம் மற்றும் வளங்களுக்கான போராட்டத்தில் மொழி உரிமைகள் குறிப்பிடத்தக்கதொரு வகிபாகத்தினை ஆற்றி வருகின்றன. 1956 ஆம் ஆண்டு தமிழ் மொழியைப் புறக்கணித்துவிட்டு சிங்களத்தை தேசிய மற்றும் அரச...

View

சகலரையும் உட்படுத்துதல் மற்றும் உரிமை கொண்டிருப்பதில் மொழியின் வகிபாகம்

இலங்கையர்களிடையே மொழி தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் தோற்றுவித்துள்ள விருப்பு வெறுப்புக்களுக்கு நீண்ட நெடிய வரலாறு இருந்தாலும் மொழிப் பிரச்சினை இன்னும் முடிந்தபாடில்லை. சமாதானத்துக்காக குரலெழுப்புவோர் மற்றும் தமிழ் மொழி பேசும் மக்களின் எதிர்பார்ப்புக்கள் எவ்வாறிருப்பினும் சுதந்திர தின நிகழ்வுகள், அரச மற்றும் தனியார் வைபவங்களில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே இசைக்கப்படுகின்றது. அந்த வகையில், இலங்கை அடுத்த வருடம் கொண்டாடவுள்ள 75 ஆவது சுதந்திர தின நிகழ்வை மாற்றத்துக்கான...

View

அரசகரும மொழிகள் வாரம் – 2021 அகில இலங்கை பாடசாலைக் கட்டுரைப் போட்டியின் வெற்றியாளர்கள்

வருடாந்தம் ஜூலை மாதம் 01 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரையில் இடம்பெறும் அரசகரும மொழிகள் வாரத்தினை முன்னிட்டு அரசகரும மொழிகள் ஆணைக்குழு, தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்துடன் இணைந்து 2021 ஆம் ஆண்டில் நடாத்திய அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கட்டுரை போட்டிக்காக பாடசாலை மாணவர்களினால் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில ஆகிய மொழிமூலங்களில் 1210 இற்கும் மேற்பட்ட கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இக்கட்டுரைப் போட்டியானது, கொரோனா...

View

“நான் எனது தாய்மொழியை நேசிப்பதுடன் பிறமொழிகளிற்கும் மதிப்பளிக்கின்றேன்”

அரச கரும மொழிகள் வாரத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட அகில இலங்கை கட்டுரைப் போட்டியின் விருது வழங்கும் வைபவத்தினை அரச கரும மொழிகள் ஆணைக்குழு நடாத்துகின்றது. ஒவ்வொரு வருடமும் ஜுலை 01 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரை  கொண்டாடப்படுகின்ற அரச கரும மொழிகள் வாரத்தை முன்னிட்டு அரச கரும மொழிகள் ஆணைக்குழு (OLC) தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்துடன் (NLEAP) இணைந்து நடாத்திய அகில இலங்கை...

View

தேசிய மொழிகள் நிதியத்தின் வெற்றிக்கதை : அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையம் (SLCDF) | இரண்டாம் மொழிக் கற்றலினூடாக வாழ்க்கையை மாற்றி சமூகங்களை மேம்படுத்துதல்.

அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையத்தின் இரண்டாம் மொழிக் கற்றல் நிகழ்ச்சித்திட்டம் அஞ்சலதிபரின் தொழிலைப் பாதுகாத்துள்ளது.   சசினி அமந்தா 27 வயதுடைய சிங்கள யுவதி. தனது கல்வியைப் பூர்த்திசெய்துவிட்டு அரசாங்கத் தொழிலொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற அவாவுடன் இருந்தாள். பல்வேறு முயற்சிகளின் பிறகு காலி, யக்கலமுல்லைப் பிரதேசித்தில் அமைந்துள்ள கொட்டாவ உபதபால் நிலையத்தில்  உள்ளகப் பயிற்சிக்கான வாய்ப்பு கிடைத்தது. தனது உள்ளகப் பயிற்சியின் மூலம் அதிகபட்ச பயனைப் பெற்று சம்பந்தப்பட்ட...

View