அமைச்சுடன் ஒருங்கிணைந்து என்எல்ஈஏபி உள்நாட்டில் நிர்வகிக்கப்படும் நிதியினை நிர்வகிக்கும் – Fund (NLF) of C$2M. நல்லிணக்கத்திற்காக மொழி உரிமைகளை மேம்படுத்துவதற்கும் தேசிய பாலமாகக் கலாசாரப் பல்வகைமையினைச் சிறந்த முறையில் ஏற்றுக்கொண்டு மெச்சுவதற்காகவும் அரசகரும மொழிகளில் தொடர்பாடுவதற்கான பிரசைகளின் மேம்பட்ட ஆற்றலை முன்னேற்றுவதற்காகவும் பெண்கள் மற்றும் இளைஞர் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான இலங்கை நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கும். மொழிச் சங்கங்களின் ஆளுகையினை வலுப்படுத்துதல், சிவில் சமூக நிறுவனங்களின் ஆற்றலை விருத்திசெய்தல், கூட்டுச் சக்திமிக்க நிறுவனங்களின் மத்தியில் செயற்திறன்மிக்க பங்காண்மையினைப் போஷித்தல், மொழிப் போதனையினை மேம்படுத்துதல், மொழி உரிமைகள் மற்றும் அரசாங்கத்தின் கடப்பாடு பற்றிய பிரசைகளின் விழிப்புணர்வினை அதிகரித்தல் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரப்புவதற்கு தேசிய மற்றும் உள்ளுர் மன்றுகள் மற்றும் ஆய்வுகளுக்கு ஆதரவு வழங்குதல் உள்ளிட்ட பரந்த வீச்சிலான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள நிதியம் எதிர்பார்த்துள்ளது.