பிரதான உபாயமார்க்கங்கள் (2018-2022)
இலங்கை அரசகரும மொழிக் கொள்கையின் தொடர்ச்சியான பரிமாற்றத்தினையும் புரிதலையும் ஒத்திசைவான அமுல்படுத்தலையும் உறுதிப்படுத்துவதற்கு, பரந்த அளவிலான சிவில் சமூக நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு மேலதிகமாக பல அமைச்சுக்களும் நிறுவனங்களும் செயற்றிட்டம் முழுவதினூடும் ஈடுபடுத்தப்படும். இவ்வாறான முறையில் நாட்டினுள் அரசகரும மொழிக் கொள்கைக்குப் பங்களிப்பு வழங்கும் அனைவருக்குமான ஓர் உறுதியான வகைப்பொறுப்புப் பொறிமுறையினை உறுதிப்படுத்த NLEAP பங்களிப்பு வழங்கும். இதில் அரசகரும மொழிகள் ஆணைக்குழு (OLC) இலங்கைப் பாராளுமன்றத்திற்கு வருடாந்த அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதும் உள்ளடங்குகின்றது.
மொழிக் கொள்கை உபாயமார்க்கங்கள்
பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
அமைச்சின் இணை நிறுவனங்களான மொழிக்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய நிறுவனம் (NILET), அரசகரும மொழிகள் திணைக்களம் (DOL), அரசகரும மொழிக் கொள்கை அமுல்படுத்தலை மேற்பார்வை செய்யும் பாராளுமன்ற அமைப்பு மற்றும் அரசகரும மொழிகள் ஆணைக்குழு ஆகியவை அவற்றின் அரசகரும மொழிக் கொள்கையினை உள்ளடக்கும் தன்மைமிக்க முறையில் உருவாக்கி அமுல்படுத்துவதற்காக அவற்றினை வசதிப்படுத்தி அவற்றிற்கு உதவுவதற்காக தனது ஆற்றலை வலுப்படுத்துவதன் மூலம் அரசகரும மொழிக் கொள்கையின் அமுல்படுத்தலுக்கான சிறப்புத் தகைமை மையமாக அமைச்சு மாறும். தெரிவுசெய்யப்பட்ட புவியியல் பிரதேசங்களில் பின்வரும் பிரதான அமைச்சுக்கள் மற்றும் அவற்றின் நிறுவனங்கள் ஆகியவற்றினால் தரம் வாய்ந்த அரசகரும மொழிகள் திட்டத்தின் உருவாக்கம் மற்றும் விநியோகத்திற்கும் அமைச்சு ஆதரவு வழங்கும்:
- உள்நாட்டலுவல்கள் அமைச்சு: மாவட்ட செயலகங்கள் மற்றும் இருமொழிப் பிரதேச செயலகங்கள்
- பொது நிர்வாகம் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சு: அரசசேவை ஆணைக்குழு, அபிவிருத்தி நிர்வாகத்திற்கான இலங்கை நிறுவனம், இலங்கை பொலிஸ் சேவையின் பொலிஸ் நிலையங்கள்
- சுகாதார அமைச்சு: தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகள் மற்றும் சமுதாய வைத்திய நிலையங்கள்
- நீதி அமைச்சு: நீதவான்கள், மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் இலங்கை உயர் நீதிமன்றங்கள்
- மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மற்றும் விளையாட்டு அமைச்சு: மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அதிகார சபைகள்
நான்கு பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) மூலம் மொழிபெயர்ப்பில் கலைமானிப் பட்டக் கற்கைநெறிக்கும் அமைச்சு உதவும். மேலும் அதன் இணைந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றில் உரைபெயர்ப்பில் டிப்ளோமா நிகழ்ச்சித்திட்டத்தினை நடத்துவதற்கும் உதவும்.
அரசகரும மொழிகள் திணைக்களம்(DOL)
அரசகரும மொழிகள் ஆணைக்குழு அதற்கு வழங்கப்பட்டுள்ள ஆணையினை வழங்குவதற்காகப் பின்வரும் மூன்று தனித்துவமான அலகுகளின் உருவாக்கத்தினை உள்ளடக்குகின்ற நிறுவன மீள்கட்டமைப்பாக்கம் மூலம் அதன் ஆளுகையினை வலுப்படுத்தும்: (I) அரசகரும மொழிகள் பற்றிய பொதுமக்களின் அறிவினை உறுதிப்படுத்துவதற்கும் அதற்கு அவர்கள் இயைபுறுவதனை உறுதிப்படுத்துவதற்கும் தொடர்பாடல் மற்றும் ஊடகம் (II) விழிப்புணர்வு மற்றும் இயைபுறலை அளவிட்டு மேம்படுத்துவதற்காக தொனிப்பொருள் ரீதியான ஆய்வுகளும் மதிப்பீடுகளும் (III) முறைப்பாட்டுப் பொறிமுறை, கணக்காய்வுகள் மற்றும் தீர்ப்பு வழங்கல் செயன்முறை. அரசாங்க நிறுவனங்களினுள் அரசகரும மொழிக் கொள்கையின் நிலை பற்றிய, வழங்கப்படும் சேவையின் தரம் பற்றிய, பெற்றுக்கொண்ட முறைப்பாடுகள் பற்றிய அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய வாடிக்கையாளர் திருப்தி பற்றிய மற்றும் எதிர்காலச் செயற்பாடுகளுக்கான பரிந்துரைகள் பற்றிய வருடாந்த அறிக்கையினை ஆணைக்குழு பாராளுமன்றத்திற்கு வழங்கும். தற்போது அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அமைச்சு மூலம் அறிக்கையிடுவதன் மூலம் அரசகரும மொழிகள் ஆணைக்குழு பாராளுமன்றத்திற்கு நேரடியாக அறிக்கையிடுவதனை முன்மொழிந்து பாரிய சுயாதீனத்திற்கு வழிகோலும்.
அரசகரும மொழிகள் ஆணைக்குழு (OLC)
அரசகரும மொழிகள் ஆணைக்குழு அதற்கு வழங்கப்பட்டுள்ள ஆணையினை வழங்குவதற்காகப் பின்வரும் மூன்று தனித்துவமான அலகுகளின் உருவாக்கத்தினை உள்ளடக்குகின்ற நிறுவன மீள்கட்டமைப்பாக்கம் மூலம் அதன் ஆளுகையினை வலுப்படுத்தும்: (I) அரசகரும மொழிகள் பற்றிய பொதுமக்களின் அறிவினை உறுதிப்படுத்துவதற்கும் அதற்கு அவர்கள் இயைபுறுவதனை உறுதிப்படுத்துவதற்கும் தொடர்பாடல் மற்றும் ஊடகம் (II) விழிப்புணர்வு மற்றும் இயைபுறலை அளவிட்டு மேம்படுத்துவதற்காக தொனிப்பொருள் ரீதியான ஆய்வுகளும் மதிப்பீடுகளும் (III) முறைப்பாட்டுப் பொறிமுறை, கணக்காய்வுகள் மற்றும் தீர்ப்பு வழங்கல் செயன்முறை. அரசாங்க நிறுவனங்களினுள் அரசகரும மொழிக் கொள்கையின் நிலை பற்றிய, வழங்கப்படும் சேவையின் தரம் பற்றிய, பெற்றுக்கொண்ட முறைப்பாடுகள் பற்றிய அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய வாடிக்கையாளர் திருப்தி பற்றிய மற்றும் எதிர்காலச் செயற்பாடுகளுக்கான பரிந்துரைகள் பற்றிய வருடாந்த அறிக்கையினை ஆணைக்குழு பாராளுமன்றத்திற்கு வழங்கும். தற்போது பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மூலம் அறிக்கையிடுவதன் மூலம் அரசகரும மொழிகள் ஆணைக்குழு பாராளுமன்றத்திற்கு நேரடியாக அறிக்கையிடுவதனை முன்மொழிந்து பாரிய சுயாதீனத்திற்கு வழிகோலும்.
மொழிக்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய நிறுவனம் (NILET)
சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் மேம்படுத்தப்பட்ட இரண்டாம் மொழிப் பயிற்சியினை வழங்குவதன் மூலம் அரச உத்தியோகத்தர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட மொழிப்பயிற்சி மற்றும் பயிற்சி நிறுவனமாக NIlET மாறும். மத்திய மற்றும் மாகாண அமைவிடங்களில் ஏற்கனவே உள்ள பயிற்சி மையங்கள் மூலமாகவும் மொழிச் சங்கங்கள் போன்ற ஏனைய இதற்கென அமைக்கப்பட்டுள்ள இடங்களின் மூலமாகவும் நிறுவனம் மொழிப் பயிற்சியினை வழங்கி பெண் அரச உத்தியோகத்தர்களின் பங்கேற்பிற்கு இருக்கின்ற தடைகளைக் குறைப்பதற்கும் நடவடிக்கைகளை எடுக்கும். மொழிப் பயிற்சித் திட்டங்களை உருவாக்குவதற்காகவும் முன்மதிப்பீடு மற்றும் ஆட்சேர்ப்புப் பரீட்சைகளை நடத்துவதற்காகவும் ஆற்றலின் உயர் மட்டத்தினை நிறுவுவதற்காகவும் மொழிப்பயிற்சிக்காக உத்தியோகத்தர்களை இறுதியாகத் தெரிவு செய்வதற்காகவும் பிரதான அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் சிரேஷ்ட உத்தியேகாத்தர்களுக்கு நிறுவனம் தொழில்நுட்ப உதவியினையும் ஆலோசனையினையும் வழங்கும். பெண்கள், புவியியற் பிரதேசம், இனத்துவம் மற்றும் ஆளுகை ஆகியவற்றினை விகிதாசார ரீதியில் பிரதிநிதித்துவம் செய்வது உள்ளடங்கலாக இலங்கைச் சமூகத்தின் பல்வகைமைமிக்க தன்மையினைப் பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்களுடன் மிகவும் செயற்திறன்மிக்க முகாமைத்துவச் சபை மற்றும் கல்விச் சபை ஆகியவற்றினை நிறுவனம் ஆளுகையில் கொண்டிருக்கும்.
NLEAP மனித உரிமைகள் மற்றும் பால்நிலைச் சமத்துவ உபாயமார்க்கம்
ஒரு பரந்த மனித உரிமைகள் சட்டகத்தினைக் கருத்திற்கொண்டு அரசகரும மொழிக் கொள்கையின் பிரயோகத்தின் கூறுகளின் ஊடே பால்நிலைக் கருதுகோள்கள் மற்றும் வாய்ப்புக்கள் ஆகியவற்றின் உறுதியான பகுப்பாய்வினை உறுதிப்படுத்தி NLEAP பால்நிலைச் சமத்துவத்தில் விசேட கவனத்தினைப் பேணி கனடாவின் பெண்ணியச் சர்வதேச உதவிக் கொள்கைக்குப் பின்புலமான மூன்று பால்நிலைச் சமத்துவக் கொள்கையிலிருந்து குறிப்பாகக் கட்டமைத்துச் செல்லும்:
- பெண்கள் மற்றும் சிறுமிகளின் மனித உரிமைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டினை மேம்படுத்தல்;
- சமமான தீர்மானம் வகுத்தலில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பங்கேற்பினை அதிகரித்தல் குறிப்பாக நீடுறுதியான அபிவிருத்தி மற்றும் சமாதானம் ஆகியவற்றில்;
- நடைபெறும் பொருளாதார மற்றும் சமூகச் சமத்துவம் ஆகியவற்றினைப் பெறுவதற்கு வளங்களின் மீது பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் மிகவும் ஒப்புரவான அணுகலையும் கட்டுப்பாட்டினையும் வழங்கல்
NLEAPயின் பால்நிலைச் சமத்துவ உபாயமார்க்கம் சர்வதேச சமவாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மனித உரிமைகளினை அனுபவிப்பதில் உறுதியாக வேரூன்றியுள்ளதுடன் குறிப்பாக சமூக நீதி மற்றும் சேவைகளை அணுகக்கூடியதாக இருப்பதில் பாகுபாடு காட்டப்படாமைக்கான உரிமையில் வேரூன்றியுள்ளது. இது சுகாதாரம்(வைத்தியசாலைகள், கிளினிக்குகள், முதல் பதில்செயற்பாட்டாளர்கள்), நீதி (நீதிமன்றங்கள்) மற்றும் பாதுகாப்புச் சேவைகள்(பொலிஸ்) ஆகியவற்றில் இருந்து முதன்மைச் சேவைகளைப் பெறுவது தொடர்பாகவும் உண்மையானதாகும். பால்நிலை அடிப்படையிலான பாகுபாடு சகல கலாசாரங்களிலும் ஊடுருவிச் செல்கின்றது. தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் NLEAP சட்டங்கள், கொள்கைகள், செயல்விதிகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாகச் சம்பந்தப்படுகின்ற நிறுவனங்களின் தனித்துவமான அம்சங்களிலும் கவனம் குவிக்கும்.
NLEAP பால்நிலைச் சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் பற்றிய உபாயமார்க்கம்
மொழிகளுக்கான உரிமையினை சகல ஆண்களினதும் பெண்களினதும் ஓர் அடிப்படை உரிமையாக இலங்கை அங்கீகரிக்கின்றது. ஆனால், இலங்கையின் பெண்களும் ஆண்களும் தமது மொழி உரிமைகளை அடைந்துகொள்வதில் பல்வகையான அனுபவங்களைக் கொண்டுள்ளனர் என்பதுடன், மொழி உரிமையானது இனத்துவத்தினாலும் சமூக மற்றும் பொருளாதார அந்தஸ்தினாலும் தாக்கத்திற்குள்ளாகும் ஒன்றாகவும் இருந்து வருகின்றது.
தமது மொழி உரிமைகளை அடைந்துகொள்வதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் காணப்படும் வித்தியாசமானது கொள்கை வகுத்தலில் பங்குபற்றுவதிலும் கொள்கை மற்றும் நிகழ்ச்சித்திட்ட அமுல்படுத்தல் மற்றும் சேவை விநியோகத்திலும் சேவைகள் மற்றும் நன்மைகளை அடைந்துகொள்வதிலும் சமமற்ற சூழ்நிலைகளை உருவாக்குகின்றது. இந்தச் சமமின்மைகள் பொதுவாகப் பெண்களுக்கெதிராகப் பாகுபாடு காட்டுவதுடன் பெண்கள் சகல துறைகளிலும் பங்குபற்றுவதையும் அணுகுவதையும் பாதிக்கின்றது. அத்துடன் இவ்வாறான சகல துறைகளிலும் தனது தெரிவுக்குரிய மொழியில் பெண்கள் பணியாற்றுவதும் இடையீடு மேற்கொள்வதும் பிரதான காரணியாகும். இவற்றுள் கல்வி மற்றும் பயிற்சி, பொருளாதாரச் செயற்பாடுகள் மற்றும் நன்மைகள் (தொழிலினைப் பெறல் மற்றும் சுயாதீனமான வருமானம் உள்ளடங்கலாக), சுகாதாரப் பராமரிப்பு மற்றும் போசாக்கு, குடும்பச் சேவைகள் தொடர்பான விடயங்கள் (சொத்துரிமை மற்றும் திருமணம் உள்ளடங்கலாக), சமூகப் பாகுபாட்டில் இருந்து பாதுகாப்பு மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறையில் இருந்து பாதுகாப்பு ஆகியவையும் உள்ளடங்குகின்றன. இப்பாகுபாடுமிக்க வித்தியாசங்கள் மொழி உரிமையினை மேம்படுத்துவதில் பெண்களின் வலுவூட்டல் மற்றும் பால்நிலையினைப் பெரும்போக்காக்குவதற்கான தேவை பற்றிய புரிதல் மற்றும் அதன் மீதான கவனக்குவிப்பு இல்லாமையினால் பிரதானமாக ஏற்படுகின்றது. இவை பால்நிலைக் கூருணர்வற்ற கொள்கை உருவாக்கத்தினால் உருவாகி பால்நிலை நடுநிலைமிக்க நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் சேவை விநியோகம் ஆகியவற்றிலும் பரவுகின்றது.
NLEAP யின் பால்நிலைச் சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் பற்றிய உபாயமார்க்கம் (GEWE உபாயமார்க்கம்) ஆகியவை இலங்கையின் அரசியலமைப்பில் பொதிந்துள்ள கடப்பாடுகளில் இருந்தும் பால்நிலைச் சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் ஆகியவற்றினை மேம்படுத்தும் தேசிய மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளுக்கான கடப்பாடுகளில் இருந்தும் உருவாகுகின்றன. இந்த உபாயமார்க்கமானது கனடாவின் பெண்ணியச் சர்வதேச உதவிக் கொள்கைக்கான (FIAP) கடப்பாடுகளினால் வலுப்படுத்தப்படுகின்றது. இது ஏனைய கடப்பாடுகளின் மத்தியில் வறுமையினைக் குறைத்து, மிகவும் உள்ளடக்கும் தன்மைமிக்கதும் சமாதானமானதும் மறுமலர்ச்சிமிக்கதுமான உலகினை உருவாக்குவதற்கான மிகவும் செயற்திறன்மிக்க அணுகுமுறையாகப் பால்நிலைச் சமத்துவத்தினை மேம்படுத்துவதையும் அனைத்துப் பெண்களையும் சிறுமிகளையும் வலுவூட்ட உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கனடாவின் சர்வதேச உதவியின் மையப் பரப்பாகப் பால்நிலைச் சமத்துவத்தினையும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் வலுவூட்டலையும் FIAP எதிர்பார்க்கின்றது.
பால்நிலைச் சமத்துவம் என்பது பெண்களையும் ஆண்களையும் குறிக்கின்றது என்பதனை NLEAP ஏற்றுக்கொள்வதுடன் ஆண்களும் பெண்களும் அவர்களின் மொழி உரிமைகளைப் பூரணமாக அனுபவிப்பதைப் பாதிக்கும் பல்வகையான சமூக கலாசார காரணிகளின் காரணமாக பெண்களும் ஆண்களும் அனுபவிக்கும் விளிம்புநிலையாக்கம் மற்றும் விலக்கிவைப்பு ஆகிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவற்றினைப் பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்வதனை NLEAP மெச்சுகின்றது. ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் குறிப்பாக மேலதிகமாக விளிம்புநிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பதையும் விலக்கிவைக்கப்படுகின்றனர் என்பதையும் NLEAP ஏற்றுக்கொள்கின்றது – ஏகவினமான குழுவாகப் பெண்கள் இருக்கின்ற காரணத்தினாலும் அவர்களின் பல்வகைமையானது இனத்துவ, சமய மற்றும் கலாசாரப் பின்புலங்களில் இருந்து உருவாகுகின்ற காரணத்தினாலும் அவர்களின் சமூக – பொருளாதார அந்தஸ்து காரணமாகவும் அவர்கள் வாழுகின்ற புவியியல் பிரதேசம் மற்றும் சமுதாயம் காரணமாகவும் இது நிகழ்கின்றது. பால்நிலைப் பரிமாணங்களின் இந்தப் புரிதலும் இலங்கையில் மொழி உரிமைகளைக் கருத்திற்கொள்கையில் பெண்களின் வலுவூட்டல் பிரச்சினைகளும் சமத்துவம் தொடர்பாக இரு முனை அணுகுமுறையினை NLEAP எடுப்பதற்குக் காரணமாகியுள்ளது – பால்நிலைச் சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் மீது குறிப்பிட்ட கவனக்குவிப்பு.
GEWE இனைப் பெரும்போக்காக்குவது இன்றியமையாததாகும். ஏனெனில் கருத்திட்டத்தின் சகல செயற்பாடுகளுடனும் நடவடிக்கைகளுடனும் உரிமைகள் அடிப்படையிலான விடயங்களைப் பூரணமாக ஒருங்கிணைப்பதற்கு அது ஆதரவளிக்கின்றது. உபாயமார்க்கமானது கீழே காட்டப்பட்டவாறு மூன்று படிகளைக் கொண்ட GEWE பெரும்போக்காக்கல் செயன்முறையினைப் பின்பற்றும்:
படி 1: GEWEயினைப் பெரும்போக்காக்குவதற்கு கடப்பாடுகளை மறுஉறுதிசெய்தலும் ஆற்றலை வலுப்படுத்தலும்
பெரும்போக்காக்குதல் என்பது மாற்றம் பற்றியதாகும். இந்த விடயத்தில், உள்ளடக்கும் தன்மை மிக்க சுற்றாடலை உருவாக்குவதற்காகப் பங்காளர் நிறுவனங்கள் உரிமைகள் அடிப்படையிலான விடயங்களைக் கையாளுகின்ற முறையினை மாற்றுவதற்கு உதவுவதாக அது அமையும். மொழி உரிமைகளை மேம்படுத்துவதில் GEWEயினைப் பெரும்போக்காக்குவதனை உறுதிப்படுத்துவதற்கு தொழில்நுட்ப மற்றும் நிறுவன ரீதியான ஆற்றலினைப் புதுப்பித்து இற்றைப்படுத்துவதை இந்தப் படி நோக்கமாகக் கொண்டுள்ளது.
படி 2: GEWEயினைப் பெரும்போக்காக்குவதற்காகக் கடப்பாடுகளைப் பிரயோகித்தல் மற்றும் ஆற்றலை வலுப்படுத்தல்
அரசாங்கம் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட பங்காளர் நிறுவனங்கள் அவற்றின் கூருணர்வு மற்றும் விழிப்புணர்வு மட்டங்களைப் புதுப்பித்து GEWEயினைப் பெரும்போக்காக்குவதற்கான அவற்றின் ஆற்றலை அதிகரித்ததும் அவை இந்த ஆற்றலைப் பிரயோகிப்பதற்குத் தயாராகிவிடும் என்பதுடன் சேவை வழங்கல் உள்ளடங்கலாக அவற்றின் உள்நிலைக் கொள்கைகள், கோட்பாடுகள், திட்டங்கள் மற்றும் வழிகாட்டல்கள், கருத்திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் ஆகியவற்றின் அமுல்படுத்தலுக்கு GEWEயினைப் பெரும்போக்காக்குவதை உறுதிப்படுத்தத் தயாராகிவிடும். இந்த GEWE ஒருங்கிணைப்புச் செயன்முறைக்கும் தற்போது நடைபெறும் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் செயற்பாடுகளினுள் GEWEயினை ஒருங்கிணைப்பதற்கும் NLEAP உதவியுடன் நடத்தப்படவுள்ள செயற்பாடுகளுக்கும் படி 2இல் உள்ள முயற்சிகள் உதவி வழங்கும்.
படி 3: GEWEயினைப் பெரும்போக்காக்குவதனை நிறுவனமயப்படுத்தல்
படி 3 இறுதிப் படியாகும். இது செயன்முறையின் பூர்த்தியினைக் குறிப்பதுடன் பங்காளர் நிறுவனங்களினுள் உரிமைகள் அடிப்படையிலான விடயமாகப் பங்காளர்களினால் மொழி உரிமைகள் நிகழ்ச்சித் திட்டங்களினுள் GEWEயினைப் பூரணமாக ஒருங்கிணைப்பதனையும் குறிக்கின்றது. எவ்வாறாயினும் நிறுவனங்களினுள்ளே இடம்பெறும் மாற்றங்களும் பால்நிலைச் சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் ஆகியவற்றின் மேம்பாட்டினைக் கையாளுவதற்கான செயன்முறையும் பேணப்பட்டு எப்பொழுதும் நிலைநிறுத்தப்படவேண்டும். படி 3 இன் போதான கருத்திட்டச் செயற்பாடுகள் பால்நிலைச் சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் ஆகியவற்றின் மேம்பாடு நிறுவன மயமாக்கப்படுவதை உறுதிப்படுத்தும்.
GEWE உபாயமார்க்கம் NLEAPயின் இறுதி விளைவில் கவனம் செலுத்துகின்றது: இலங்கையில் வாழும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளைப் பேசும் பெண்கள் மற்றும் ஆண்களின் குறைக்கப்பட்ட வறுமையும் மேம்படுத்தப்பட்ட பொருளாதார மற்றும் சமூக சமத்துவமும். அதேபோன்று இடைநிலை விளைவுகளிலும் உபாயமார்க்கம் கவனம் செலுத்துகின்றது: பால்நிலைக் கூருணர்வுமிக்கதும் இரு மொழிகளில் அமைந்ததுமான அரசாங்க சேவைகளின் வலுப்படுத்தப்பட்ட செயற்திறன், தமது நாட்டின் கலாசாரப் பல்வகைமையினையும் இருமொழித் தன்மையினையும் இலங்கை ஆண்களும் பெண்களும் அதிகரித்த அளவில் ஏற்றுக்கொள்ளல் மேலும் பெண்களின் வலுவூட்டலை மேம்படுத்தும் வகையில் பால்நிலைக் கூருணர்வுமிக்க வழியில் அரசாங்கச் செயற்படுனர்களினால் இலங்கை அரசகரும மொழிக் கொள்கை வலுப்படுத்தப்பட்ட வகையில் அமுல்படுத்தப்படல்.